நவராத்திரி வழிபாட்டு முறை
நவராத்திரி வழிபாட்டு முறை – முதல் நாள் (13/10/15) வழிபாடு
அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமான சாமுண்டியாக இவள். அண்டசராசரத்துக்கும் தலைவி. அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும்
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!
அம்பாள்: சாமுண்டி
உருவ அமைப்பு: தெத்துப்பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து மாலையாக கொண்டவள்
குணம்: குரூரம் (நீதியைக் காக்க)
சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி
நெய்வேத்யம்: சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை
பூஜை செய்ய சிறந்த நேரம்: காலை 10.30 – 12; மாலை: 6 – 7.30
பூஜைக்கு உகந்த மலர்: மல்லிகை
சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலங்களின் எண்ணிக்கை: குறைந்தது 7
பாட வேண்டிய ராகம்: காம்போதி
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
எண் ஜோதிடப்படி: 8ம் எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண், பெயர் எண், பிரமிட் எண்)
திசை, புத்தி நடப்பவர்கள்: சனி அல்லது ராகு – திசை அல்லது புத்தி, அல்லது அந்தரம் நடப்பவர்கள்
ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1]
மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு–கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
[2]
மூல மந்திரம்: ஓம் – ஹ்ரீம் – சாமுண்டி – ஆசனாயயாய – நம: (not for those who have not been initiated)
[3]
காயத்ரி: ஓம் பிசாசத்வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்
நவராத்திரி வழிபாட்டு முறை – இரண்டாம் நாள் (14/10/15) வழிபாடு
அம்பிகையை வராஹியாக கைகளில் சூலம் உலக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் இவளை வணங்கினால் போட்டி பொறாமையால் தொந்தரவு தரும் எதிரிகளிடம் இருந்து விடுதலை பெறலாம்.
நைவேத்யம்: தயிர் சாதம்
பாட வேண்டிய பாடல்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
நவராத்திரி நாமாவளி:நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
துர்க்கா தேவி:
ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
லெட்சுமி ஸ்ரீதேவி:
ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம
ஸ்ரீசரஸ்வதி தேவி:
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம
நவராத்திரி வழிபாட்டு முறை – மூன்றாம் நாள் (15/10/15) வழிபாடுஅம்பாள்: இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)
உருவ அமைப்பு: கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.விருத்திராசுரனை அழித்தவள்.
குணம்: சௌம்யம்
சிறப்பு: ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்
நெய்வேத்யம்: வெண்பொங்கல், வெண் பாயாசம்
பூஜை செய்ய உகந்தநேரம்: காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர்: மல்லிகை
கொடுக்க வேண்டியதாம்பூலங்கள்: 9 அல்லது 11
பாட வேண்டிய ராகம்: ஆனந்த பைரவி
வணங்க வேண்டியநக்ஷத்ரகாரர்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள்: சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம்: உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்
சொல்ல வேண்டியபாடல்:
[1] மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
[2] மூலமந்திரம்: ஓம் – ஹ்ரீம் – இம் – வம் -இந்திராணியை – நம : (Donot chant this if you do not have any initiation)
[3] காயத்ரி: ஓம்கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
நவராத்திரி வழிபாட்டு முறை – நான்காம் நாள் (16/10/15) வழிபாடுஅம்பாள் வைஷ்ணவி
உருவ அமைப்பு சங்குசக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும்கூறுவர்)
குணம் சௌம்யம்
சிறப்பு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்
நெய்வேத்யம் எலுமிச்சை சாதம், பானகம்
பூஜை செய்ய உகந்தநேரம் காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30
மலர் மல்லிகை
கொடுக்க வேண்டியதாம்பூலங்கள் 9 அல்லது 11
பாட வேண்டிய ராகம் காம்போதி
வணங்க வேண்டியநக்ஷத்ரகாரர்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள் செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம்,கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்
விசேஷம் மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெறஇன்று விரதம் இருத்தல் நன்று
சொல்ல வேண்டியபாடல்:
[1] உறைகின்றநின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
[2] மூலமந்திரம்: ஓம் – ஹ்ரீம் – யம் – வம் -வைஷ்ணவ்யை – நம : (Do notchant this if you do not have any initiation done)
[3] காயத்ரி: ஒம்ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!
நவராத்திரி வழிபாட்டு முறை – ஐந்தாம் நாள்(17/10/15) வழிபாடு
அம்பாள் மகேஷ்வரி
உருவ அமைப்பு: திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.
குணம் சௌம்யம்
சிறப்பு: ஸ்ரீசிவனின் அம்சம்
நெய்வேத்யம்: புளியோதரை, உளுந்தன்னம் – இனிப்பு
பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர் : வில்வ இலை, மரிக்கொழுந்து
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 11
பாட வேண்டிய ராகம்: அடானா
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
திசை புத்தி நடப்பவர்கள்: புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்
விசேஷம்: கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
சொல்ல வேண்டிய பாடல்:
[1] ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே
[2]
மூல மந்திரம்: ஓம் – மாம் – மகேஷ்வர்யை – நம : (Do not chant this if you do not have any initiation)
[3]
காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
நவராத்திரி வழிபாட்டு முறை – ஆறாம் நாள்(18/10/15) வழிபாடு
அம்பாள் கௌமாரி
உருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.
குணம் சௌம்யம்
சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம்
நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால்
பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர் செவ்வரளி
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7
பாட வேண்டிய ராகம் காவடி சிந்து
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி, மகம், மூலம்
திசை புத்தி நடப்பவர்கள் குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
[2] மூல மந்திரம்: ஓம் – சிம் – கௌமாரியை – நம : (Do not chant this if you do not have any initiation)
[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்
நவராத்திரி வழிபாட்டு முறை – ஏழாம் நாள்(19/10/15) வழிபாடு
அம்பாள் ஸ்ரீமகாலக்ஷ்மி
உருவ அமைப்பு கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம்,சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.
குணம் சௌம்யம்
சிறப்பு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி
நெய்வேத்யம் பால் சாதம், பால் பாயாசம்
பூஜை செய்ய உகந்தநேரம் மாலை 6 – 7.30
மலர் முல்லை,வெண்மை நிறமுடைய பூக்கள்
கொடுக்க வேண்டியதாம்பூலங்கள் 11
பாட வேண்டிய ராகம் கல்யாணி
வணங்க வேண்டியநக்ஷத்ரகாரர்கள் பரணி, பூரம், பூராடம்
திசை புத்தி நடப்பவர்கள் சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்
விசேஷம் சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.
எண் கணிதப் படியாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்
சொல்ல வேண்டியபாடல்:
[1] தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
[2] மூலமந்திரம்: ஓம் – லம் – லக்ஷ்மியை – நம : (Do not chant this ifyou do not have any initiation)
[3] காயத்ரி: ஓம்மஹாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்யைச தீமகி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்!
நவராத்திரி வழிபாட்டு முறை – ஏழாம் நாள்(19/10/15) வழிபாடு
அம்பாள் ஸ்ரீநரஸிம்ஹி
உருவ அமைப்பு மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்
குணம் குரூரம் (சத்ருக்களை )
சிறப்பு ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்
நெய்வேத்யம் சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு
பூஜை செய்ய உகந்த நேரம் காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30
மலர் துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 8
பாட வேண்டிய ராகம் காம்போதி
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
திசை புத்தி நடப்பவர்கள் சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்
விசேஷம் சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்
எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
[2] மூல மந்திரம்: ஓம் – ஸ்ரீம் – நரஸிம்யை – நம : (Not for those who have not been initiated)
[3] காயத்ரி: ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!
நவராத்திரி வழிபாட்டு முறை – ஒம்பதாம் நாள் (21/10/15) வழிபாடு
அம்பாள் ஸ்ரீபிராஹ்மி
உருவ அமைப்பு அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.
குணம் சௌம்யம்சிறப்பு ஸ்ரீபிரும்மாவின் அம்சம்
நெய்வேத்யம் சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர் மல்லிகை, செம்பருத்தி, கேந்தி
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 11
பாட வேண்டிய ராகம் கானடா, குறிஞ்சி
யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
திசை புத்தி நடப்பவர்கள் சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம் வித்யாதாரிணி – கல்வி, வித்தைகளுக்கு அதிபதி
எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
[2] மூல மந்திரம்: ஓம் – சிம் – பிராஹ்மயே – நம : (Not for those who were not initiated)
[3] காயத்ரி: ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!
�� நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!
நவராத்திரி வழிபாட்டு முறை – ஒம்பதாம் நாள் (21/10/15) வழிபாடு
அம்பாள் ஸ்ரீபிராஹ்மி
உருவ அமைப்பு அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.
குணம் சௌம்யம்சிறப்பு ஸ்ரீபிரும்மாவின் அம்சம்
நெய்வேத்யம் சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர் மல்லிகை, செம்பருத்தி, கேந்தி
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 11
பாட வேண்டிய ராகம் கானடா, குறிஞ்சி
யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
திசை புத்தி நடப்பவர்கள் சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம் வித்யாதாரிணி – கல்வி, வித்தைகளுக்கு அதிபதி
எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
[2] மூல மந்திரம்: ஓம் – சிம் – பிராஹ்மயே – நம : (Not for those who were not initiated)
[3] காயத்ரி: ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!