• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

247 தமிழ் எழுத்துக்கள் வேண்டாமே!

Status
Not open for further replies.
247 தமிழ் எழுத்துக்கள் வேண்டாமே!

tamil+alpha+1.jpg


தமிழ் வாழ்க ! தமிழ் (எழுத்து) ஒழிக!!

ஆண்டுதோறும் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பில் முதல் நாள்தான் எனக்கு மிகவும் கஷ்டமான நாள். முதல் ஒரு மணி நேரத்தில் தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் ‘இந்திரனே சந்திரனே’ என்று புகழ்வேன். தொல்காப்பியத்தில் துவங்கி இட்லி, சாம்பார், வடை, மசாலா தோசை முதலியவற்றை விளக்கிவிட்டு நகைப்புக்குரிய திராவிட கட்சிகள் பிளவுபட்டதையும் தமிழ் அரசியல் சினிமா அடிப்படையுடையது என்பதையும் சொல்லிவிட்டு, தமிழர்கள் சினிமா இல்லாமல் வாழமுடியாது என்ற பொன் மொழிகளை உதிர்த்துவிட்டு ஒரு ‘காப்பி பிரேக்’ கொடுத்து விடுவேன். சுவையான விஷயங்களை கேட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு திரும்பியவுடன் ஒரு குண்டைத் தூக்கிப் போடுவேன்.


“ ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் இருப்பது உங்களில் பெரும்பாலோருக்குத் தெரியும். தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று தெரியுமா?” என்று கேட்பேன். பெரும்பாலும் அமைதியே நிலவும். ஏனெனில் படிக்க வருவோரில் ஒரு இத்தாலியர், ஒரு பிரெஞ்சு,, ஒரு ஜப்பானியர், அதிகமாக பிரிட்டனில் பிறந்த இந்திய-இலங்கைத் தமிழர்கள், அவர்களை மணந்துகொண்ட நார்வே, கனடா, சுவீடன் நாட்டினர் என்று ஒரே அவியல்தான்.


நான் சொல்கிறேன். தமிழில் 247 எழுத்துக்கள் என்றவுடன் வகுப்பில் பெருமூச்சு விடும் இரைச்சல் கேட்கும். பின்னர் ஒருவரை ஒருவர் புருவத்தை உயர்த்தியவாறே முறைத்துப் பார்ப்பார்கள். ஒரு நிமிடம் ‘பாஸ்’ கொடுத்துவிட்டு ஒரு ‘குட் நியூஸ்’ சொல்கிறேன். 12 உயிர் எழுத்துக்களையும் 18 மெய் எழுத்துக்களையும் படித்துப் புரிந்து கொண்டால் போதும் மற்ற 216 (18x12=216) எழுத்துக்கள் தானாக வந்து விடும் என்பேன். அப்போதும் அவர்கள் முகத்தில் ஏமாற்றமே தேங்கி நிற்கும். இன்னொரு ‘குட் நியூஸ்’ சொல்லட்டுமா? என்று சொல்லிக் கொண்டே மதுரை புதுமண்டபம் புத்தகக் கடைகளில் இருந்து வாங்கிவந்த பெரிய ‘போஸ்டர்’களைப் பிரித்து சுவற்றில் ஒட்டி இவைதான் 247 தமிழ் எழுத்துக்கள் என்று அறிமுகப் படுத்துவேன். பெரும்பாலான தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் தெய்வத்தின் முதல் தரிசனம் அதுதான். கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையுடன் பயபக்தியுடன் எழுத நோட்டுப் புத்தகங்களைத் திறப்பார்கள். இதற்குள் வேறு ஒரு போஸ்டரைத் திறந்து “ இதில் இவை எல்லாம் உதவாக்கரை எழுத்துக்கள். இன்று பயன்படாதவை. அதில் ஒன்று ஆயுத எழுத்து” என்றெல்லாம் விளக்குவேன்.


தமிழில் வேண்டாத எழுத்துக்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய அரிச்சுவடி செய்தால் என்ன? என்று தோன்றவே தமிழ் எழுத்துக்கள் ஒழிக என்று தலைப்பிட்டேன்.


தமிழர்கள் ‘டியூப் லைட்’டுகள்! எந்தக் கருத்தைச் சொன்னாலும் முதலில் ஏற்கமாட்டார்கள். காரணம், புரிவதற்கு கொஞ்சம் தாமதமாகும். எங்களைப் போன்று வெளி நாட்டு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால்தான் இந்த விசயம் நன்கு புரியும் ‘ங’ வர்க்கம் ‘ஞ’ வர்கம் ‘ஔ’ வர்கம் ‘ ஃ ’ இவை இல்லாமல் தமிழால் வாழ முடியும். பல எழுத்துகளை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் அரிச்சுவடியில் இன்னும் இருக்கின்றன!!!!!
‘யுனிகோட்’ வந்த பின்னர், முன்னால் இருந்த பல எழுத்துக்கள் போய்விட்டன. பழைய கால குமுதம் ஆனந்த விகடன், கல்கி படிப்பவர்கள் “லை” முதலிய எழுத்துகள் வேறு விதமாக இருப்பதை அறிவார்கள். நானே கூட அவசரத்தில் போர்டில் அப்படி எழுதிவிடுவேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் என்பது சரிதான். யாராவது ஒருவர் கேள்வி கேட்ட பின்னர் அது பழைய ‘ஆர்த்தோக்ராபி’ பற்றி விளக்குவேன்.


நீங்களும் யோசியுங்கள். கீழேயுள்ள எழுத்துக்கள் தேவையா?
ங வரிசை, ஞ வரிசை, ஔ வரிசையை எடுத்தால் சுமார் 40 எழுத்துக்களைக் குறைக்கலாம். மேலும் சிறிது முயற்சி செய்தால் எதிர்காலத்தில் இன்னும் குறைக்க முடியும்.

tamil+alpha+3a.jpg

நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரைகளையும் படியுங்கள் :--

1.தமிழ் தாய் வாழ்த்தை மாற்றுக 2.தமிழ் ஒரு கடல் 3.தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா? 4.மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? உண்மையா 5. தொல்காப்பியம் காலம் தவறு- பகுதி 1,2,3,4,5 (6) தமிழர்களின் தழை உடை 1 & 2 (7) Ghost that killed 72 Tamil people 8). Three beautiful Tamil Hindu Weddings 9).இசைத் தமிழ் அதிசயங்கள் 10)தமிழ்நாட்டை உலுக்கிய பேய் 11) வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 12) வீரத்தாயும் வீர மாதாவும் 13) சங்க இலக்கியத்தில் வாகனங்கள் 14) தமிழர்கள் கணித மேதைகள் 15) Tamil saint’s Mad Experiment 17) Hundred Wonders of Tamil Nadu 18) Time Travel by Two Tamil Saints 19) Tamil Quiz பகுதிகள் 1, 2, 3. 20) First Tamil Historian 21) வரலாறு எழுதிய முதல் தமிழன் 22) தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 23) முதல் திராவிட ராணீ 24) கலித்தொகையில் ஒரு அதிசய செய்தி 25) புறநானூற்றில் காமாட்சி 26) புறநானூற்றில் பகவத் கீதை—பகுதி 1&2 27) சுமார் 20 தமிழ் அறிஞர்களுடன் 60 வினாடி பேட்டிகள் (எ.கா) பாரதியுடன்… கம்பனுடன்…. வள்ளுவனுடன்……. 28) குறுந்தொகையில் இருதலைக் குழந்தை 29) 20,000 தமிழ் பழமொழிகள் 30)சங்க இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள் 31)தமிழர்களின் எண் ஜோதிடம் 32)அதிசய பறவைத் தமிழன் 33)Mysterious Tamil Bird Man 34) 3 Tamil Sangams: Myth and Reality 35) வரலாறு எழுதிய முதல் தமிழன் 36)தமிழன் காதுல பூ 37)Tolkappiyan –A genious 38) தமிழர்களுக்கு தாலி உண்டு
studytamil.wordpress.com
Free YouTube Videos!
The link to my YouTube channel is below.
Santanam Swaminathan - YouTube
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top