அனத்யயனம், பகல் பத்து, இராப்பத்து உற்சவ வĬ
அனத்யயனம், பகல் பத்து, இராப்பத்து உற்சவ விபரங்கள்
==================
அடியேன் ராமானுஜ தாசன்.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் மூலமூர்த்திகளுக்கு நாள, வெள்ளிக்கிழமை, 23.12.2018 இரவு (11 மணிக்கு மேல்) முதல் தைலக்காப்பு.
நாளை, வெள்ளிக்கிழமை, 23.12.2018 - கார்த்திகையில் கார்த்திகை - திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவங்கள் (சாற்றுமறை) முடிந்தபின், பட்டோலை வாசிக்கப்பட்டு, கர்பக்ருஹத்தில் உள்ள மூல மூர்த்திகளுக்கு தைல காப்பு சார்த்தப்பட்டு, திரைபோடப்படும்.
ஆகையால், நாளை மறுநாள் சனிக்கிழமை-24.11.2018 முதல் 13.12.2018 மாலை 4 மணி வரை, மூல மூர்த்திகளை சேவிக்க இயலாது. முன்னே திரை போடப்பட்டிருக்கும்.
(24.11.2018 முதல் அனத்யயனம் தொடக்கம்.)
==================
பகல் பத்து உற்சவம் : 08-17 டிசம்பர் 2018. பகல் பத்து உற்சவத்தின் ஆறாம் நாள், 13.12.2018 அன்று மாலை 4 மணி அளவில், திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி (2வது ஆயிரம்) தொடங்கப்பெற்று, திருவல்லிக்கேணி மங்களாசாசனம் (பெரிய திருமொழி, 2.3 - விற்பெரு விழவும் பதிகம்) தொடங்கும்போது, ஸ்ரீ வேங்கடக்ருஷ்ணன் எம்பெருமான் மற்றும் மற்ற மூல மூர்த்திகளின் ஸந்நிதிகள் திறக்கப்படும், எப்போதும் மீசையுடன் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீவேங்கடக்ருஷ்ணன் பகல் பத்து ஆறாம் நாள் உற்சவம் (13.12.2018) தொடங்கி, இறுதி நாளான 17.12.2018 இரவு வரை, மீசை இல்லாமல், கிரீடம் இல்லாமல் ஏகாந்த திருக்கோலத்தில் தரிசனம் தந்து அருளுவார்.
===================
18.12.2018 வைகுண்ட ஏகாதசி நாள் மற்றும் மறுநாள் 19.12.2018 ஆகிய இரண்டு நாள்களும், முத்தங்கி சேவை.
வைகுண்ட ஏகாதசி : 18.12.2018
இராப்பத்து உற்சவம் : 18-27 டிசம்பர் 2018.
====================
இயற்பா சாற்றுமுறை (3ஆவது ஆயிரம்) : 28.12.2018
====================
கோயில்களில், 29.12.2018 முதலாக திருப்பல்லாண்டு தொடங்கப்படும்.
இல்லங்களில், தனுர் (மார்கழி) மாதம் நீங்கலாக, 24.12.2018 தொடங்கி, 26.01.2019 வரை ஆழ்வார்கள் ஸ்ரீஸுக்திகள் அனுசந்தானம் கிடையாது. ஆசார்ய புருஷர்களது க்ரந்தங்கள் மட்டுமே.
மார்கழி மாதத்திலும், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை மட்டுமே அனுசந்திக்கலாம் - அதுவும் இயன்றவரை காலை 8 மணிக்குள்ளாக இருத்தல் நல்லது. 8 மணிக்கு மேல் என்றால், ஆசார்ய புருஷர்களது க்ரந்தங்கள் மட்டுமே.
====================
26.01.2019 அன்று கூரத்தாழ்வான் சாற்றுமறை (தை, ஹஸ்தம்) முடிந்தபின், மறுநாள் (27.01.2019) முதல், இல்லங்களில் ஆழ்வார்கள் ஸ்ரீஸுக்திகள் தொடங்கலாம்.
====================
23.11.2018 முதல் 26.01.2019 வரை நிகழ உள்ள ஆழ்வார்கள் திருநட்சத்திர உற்சவங்கள்
23.11.2018 - திருமங்கை ஆழ்வார் - கார்த்திகையில் கார்த்திகை
24.11.2018 - திருப்பாணாழ்வார் - கார்த்திகையில் ரோகிணி
04.01.2019 - தொண்டரடிப்பொடி ஆழ்வார் - மார்கழியில் கேட்டை.
24.01.2019 - திருமழிசை ஆழ்வார் - தையில் மகம்
<><><><><><><><><>
தாசன்
ப.வேங்கடகிருஷ்ணன்
திருவல்லிக்கேணி