• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

Status
Not open for further replies.
அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

Indiana-Jones-Temple-of-Doom-.png


( This is translation of “India needs an Indiana Jones” already posted here)

இந்தியாவின் அரிய பெரிய பொக்கிஷங்கள், புதையல்கள், செல்வங்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. ஆனால் பல புதையல், பொக்கிஷங்களை, நல்ல வேளையாக, நமது நாட்டின் பெயர் போட்டே வெளிநாட்டு மியூசியங்களில் வைத்திருக்கிறார்கள்.

இந்திய வைரத்தை வைத்து ஹாலிவுட்காரகள் இந்தியானா ஜோன்ஸ் பாணி (Indiana Jones and Temple of Doom) படங்களைக் கூட எடுத்து, அதிலும் மில்லியன் கணக்கில் காசு பண்ணிவிட்டார்கள். கிரேக்க நாட்டு மற்றும் பைபிளில் வரும் “ஹோலி க்ரெயில்” (Holy Grail) போன்றவை குறித்து ஏராளமான நாவல்கள், சினிமாக்கள் வந்துவிட்டன. ஆனால் நாமோ நமது செல்வம் பற்றியே ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருக்கிறோம்.

வாரம் தவறாமல் லண்டன், நியூயார்க் நகரங்களில் நம் நாட்டு தொல் பொருட் செல்வங்கள் பகிரங்கமாகவே ஏலத்துக்கு விடப் படுகின்றன. ஆக நமது நாட்டிலும் ஒரு இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones) போல ஒருவர் புதைபொருள் வேட்டை நடத்த புறப்படவேண்டும். நமது செல்வங்கள் குறித்து கதைகளும் சினிமாக்களும் வெளிவரவேண்டும்.

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலில் உலகிலேயே மிகப் பெரிய புதையல் கிடைத்துள்ளது. அதை எல்லாம் அழகாக பாதுகாப்பாக மியூசியத்தில் வைக்க வேண்டும். இந்த விஷயங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி வரவேண்டும். ஏன் வெளிநாட்டுக்காரர்கள் இதில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம்முடைய உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் இன்று லண்டன் டவர் மியூசியத்தில் (Tower Museum, London) உள்ளது. பிரிட்டிஷ் மஹாராணியின் முடியை (Crown Jewels) அலங்கரிக்கும் வைரங்களில் அதுவும் ஒன்று.

திப்பு சுல்தானின் இயந்திரப் புலி (Tippu’s Tiger) பொம்மை லண்டன் விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியத்தில் உள்ளது. இந்தோநேஷியாவின் இந்துக் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அகத்தியர் சிலையும் அங்கேதான் உள்ளது.

நாமோ மீனாட்சி கோவில், திருப்பதி கோவில், ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ரத்தினங்கள், தங்க நகைகளின் மகிமை பற்றி அறியாதவராக உள்ளோம். அரசியல்வாதிகள், பல அற்புதமான ரத்தினக் கற்களை மாற்றிவிட்டு, போலி கற்களை வைத்துவிட்டதாகவும் வதந்திகள் உலவுகின்றன.

ராஜராஜ சோழன் போன்ற மாமன்னர்கள் கொடுத்த பெரிய பெரிய தங்க நகைகள், ரத்தினக் கற்கள், பாத்திரங்கள் பற்றி கல்வெட்டுகள் பேசுகின்றன. அவைகள் எங்கே என்று யாருக்கும் தெரியாது.

மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய மாபெரும் தங்க சிம்மாசனம் மைசூர் அரணமனையில் இருக்கிறது. நளன் போன்றோர் கொடுத்த அற்புதமான ரத்தினக் கற்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.

தி ஒண்டர் தட் இஸ் மீனாட்சி டெம்பிள் (The Wonder That is Madurai Meenakshi Temple) மற்றும் கொலவெறி வைரம் (Is Krishna’s Diamond in USA?) (கிருஷ்ணரின் சியமந்தகம் அமெரிக்காவில் உள்ளது ) என்ற எனது கட்டுரையில் பல புதிய தகவல்களைப் படிக்கலாம்.
ஆயிரக் கணக்காணோருக்கு உணவு வழங்க திரவுபதி பயன்படுத்திய அக்ஷய பாத்திரம் எங்கே?
பசிப்பிணி என்னும் பாவியை ஒழித்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று பிரசாரம் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுகொடுக்க மணிமேகலை பயன்படுத்திய அமுத சுரபி எங்கே?

திருவள்ளுவரை மற்றும் ஏற அனுமதித்து போலிப் புலவர்களைக் கீழே தள்ளிய சங்கப் பலகை எங்கே?

பாண்டிய நாட்டு மக்களின் பசிப்பிணி தீர்க்க சிவபெருமான் அனுப்பிய உலவாக் கிழியும் உலவாக் கோட்டையும் எங்கே?

வசிட்ட மாமுனிவர் வளர்த்த காமதேனு எங்கே? இது உயிருள்ள பசு என்று நினைக்கக் கூடாது. இந்தக் காலத்தில் ஆயிரம் சப்பாத்தி ஆயிரம் (Instant Chapathi/Idli Oven) இட்லி தயாரிக்கப் பயன்படும் இயந்திரம் இருப்பது போல ஒரு எந்திரத்தின் பெயர் காமதேனு என்று கருதலாம் அல்லவா?

நினைத்ததை எல்லாம் வழங்கும் கற்பக விருட்சம் எங்கே? இவைகளை கற்பனை என்று நினைத்தால் கதை எழுதவும் சினிமா எடுக்கவும் இந்த விஷயங்களைப் பயன்படுதலாமே !!
உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்(Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. இல்லை அது ஈரானில்தான் இருக்கிறது என்று இன்னொரு பேச்சு. இப்போது டெஹ்ரான (ஈரான்)(National Museum, Tehran, Iran) மியூசியத்தில் இந்தியாவின் அற்புதமான ரத்தினநகைகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அதிலும் ஒரு சிறிய மயில் ஆசனம் உண்டு. (இது அற்றி எனது தனி கட்டுரை உள்ளது)

முட்டாள்களையும் புத்திசாலியாகும் 32 பதுமைகள் பதித்த விக்ரமாதித்தன் சிம்மாசனம் எங்கே?

மதுரை மீனாட்சி கோவிலில் ஒரு கடம்ப மரத்தை வேலி போட்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள். இதை “கார்பன் டேட்டிங்” முறையில் ஆராய்ந்து இதன் காலத்தைக் கண்டு பிடிக்கலாம். இது போன்ற ஆய்வுகள் இந்து மதத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும். எந்த வகையிலும் குறைவு உண்டாக்காது. ஏசு கிறிஸ்து மீது போர்த்திய சால்வை என்று டூரினில் வைத்துள்ள துணியை ஆராய்ந்தார்கள். இது போல எவ்வளவோ ஆய்வுகளை நடத்தினால் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.

இந்திய மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நம்முடைய செல்வங்களை பட்டியலிட்டு, அவை எங்கே இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டும். கோவிலின் அற்புத செல்வங்களை கண்ணிரண்டையும் இமைகள் காப்பது போலக் காக்கவேண்டும். இந்திய செல்வங்களை வெளிநாடுகளில் ஏலம் போகாமல் காக்கவேண்டும்.

********************
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top