• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆகஸ்டு 22 சென்னையின் பிறந்தநாள்

Status
Not open for further replies.
ஆகஸ்டு 22 சென்னையின் பிறந்தநாள்

ஆகஸ்டு 22 சென்னையின் பிறந்தநாள்

16 th August 2015






201508161536574956_August-22ChennaiBirthday_SECVPF.gif



தென்னிந்தியாவின் முதல் நகரமும், தொன்மையான கலாசாரமும் வரலாறும் கொண்ட தமிழ்நாட்டின் தலைநகரமுமான சென்னை மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, புதிய நகரமே என்பது வியப்புக்கு உரியது.

17–ம் நூற்றாண்டில், ஜான் கம்பெனி என்ற கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் பிரான்சிஸ் டேயும், மேலதிகாரிகளின் நம்பிக்கையின்மையை திடமாக புறக்கணித்து, வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள்(ஆளுநர்கள்) பூந்தமல்லியில் அளித்த நிலத்தை, நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.

பிற்காலத்தில் சோழ மண்டல கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சி பீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர்.

சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது.

அந்த மானியத்தில் 22 ஜூலை 1639–ம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ‘டே’(கிழக்கு கம்பெனி ஏஜெண்டு), மதராஸ்பட்டினத்தை (அப்படித்தான் அந்த மானியத்தில் இடத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) ஜூலை 27 அன்று தான் அடைந்தார்.

எனவே ஜூலை என்று மானியத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறாக இருக்க வேண்டும். 27 ஆகஸ்டு 1639–ம் ஆண்டு என்பது தான் சரியாக இருக்க வேண்டும். பாரம்பரியத்தை பேணும் சில சென்னைவாசிகள், 22 ஆகஸ்டு என்ற நாளையே சென்னை தினமாக கொண்டாடுகிறார்கள்.

மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட, கடவுள் கூட அண்டாத குடியிருப்பு அது.

96182F85-70C4-4889-8142-77760E108EF9_L_styvpf.gif


பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்களா, பிரெஞ்சுக்காரர்களா, டச்சுக்காரர்களா அல்லது போர்த்துக்கீசியர்களா, யார்? அழைக்கிறார்கள் என்பதை பொறுத்து, அப்போது அந்த இடத்துக்கு பல பெயர்கள் இருந்தன.

மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான்(1639), மதராஸ்படம்(1640), மதரேஸ்பட்னம்(1641), மத்தராஸ்(1642), மதராஸ்(முதன்முறையாக 1653–ல்), மதரேஸ்படான்(1654), மதராஸாபடான்(1656), மாத்ரிஸ்பட்னம்(1958), மதேராஸ், மதிராஸ்(1673). இவை அனைத்துமே மதராஸ் என்பதன் திரிபுகள் தாம்.

அந்த வட்டாரத்தில் புழங்கிய இரு முக்கிய மொழிகளுடன் எந்தவித தொடர்பும் இல்லாத ‘மதராஸ்’ என்ற சொல் ஏன்? வந்தது என்பது இயற்கையான ஒரு கேள்வி. இந்த கேள்விக்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்துள்ள பதில்களும் திருப்திகரமாக இல்லை. மனித நடமாட்டமற்ற இந்த மண் திட்டை தேர்ந்தெடுத்தது டே தான் என்பதில் ஐயமில்லை.

டே, இந்த திட்டுக்கு சிறிது வடக்கே ஆர்மகான் என்ற துர்கராயன்பட்டினத்தில், ஜான் கம்பெனியின் ஏஜெண்டாக பணி புரிந்தார்.

மிதமிஞ்சிய குடிப்பழக்கம், சூதாட்டம் இவற்றுடன் அவருக்கு பெண் பித்து வேறு இருந்தது. இருபுறங்களில் ஆறுகளாலும், மூன்றாவது பக்கத்தில் கடலாலும் சூழப்பட்ட, அலைகள் மோதிய, இந்த திறந்த, குறுகிய தீபகற்பத்தை, கரையேறும் வசதி ஏதும் இல்லை என்ற போதிலும் டே விரும்பினார்.

இன்றைய ஆந்திர பிரதேசத்தில் மட்டபல்லத்துக்கு அருகில் உள்ள பாலக்கோலை சேர்ந்த பேரி திம்மப்பா என்பவர் தான் டேயின் துபாஷாக இருந்தார். அவரது உதவியுடன் டே, நிலத்தை மானியமாக பெற உள்ளூர் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் பேசினார். டேயின் மேல் அதிகாரியாக மசூலிப்பட்டினத்தில் இருந்தவர் கோகன். இவர் தான், ஆர்வக்கோளாறு கொண்ட டேயை ஊக்குவித்தார். இந்த இடத்துக்கு முதல் அதிகாரபூர்வ கடல் பயணத்தை மேற்கொண்டார்.

பாதுகாப்புடைய முதல் தொழிற்சாலையை இங்கு அமைத்தார். அதுதான் பின்னர் நமக்கு நன்கு தெரிந்த புனித ஜார்ஜ் கோட்டையாக மாறியது.

இந்த இடத்தில் குடியேற்றத்தை செய்தார். நகரை நிர்மாணித்த டே, கோகன் ஆகியோருடன் முதல் அதிகாரபூர்வ கடல் பயணத்தை மேற்கொண்ட, பாலக்கோல் துபாஷ் திம்மப்பா மற்றும் கம்பெனியின் வெடி மருந்து தயாரிப்பாளர் நாகபட்டன் ஆகியோருக்கு இன்று நகரில் நினைவுச்சின்னங்கள் ஏதும் இல்லை என்பது பெரும் சோகம்.

DDA7EDA2-2AA9-4AF8-B620-63B35A959609_L_styvpf.gif


பொட்டல் காடான இந்த மணல் மேட்டை தேர்ந்தெடுத்ததற்கு டே கூறிய காரணம், அங்கு தரமான துணி 20 சதவீதம் மலிவாக கிடைத்தது என்பது தான். பக்கத்தில் இருந்த போர்த்துகீசிய சாந்தோமில் வசித்த அவரது காதலியுடன் தடையின்றி, அடிக்கடி சல்லாபிக்க விரும்பியதுதான் உண்மையான காரணம் என்று ஊரார் வம்பு பேசினர். இது உண்மையோ, பொய்யோ, டேயின் காதலி அங்கு இருந்தாள் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன.

டேயை அடுத்து பொறுப்பேற்ற அவரது நண்பர் ஹென்றி கிரீன்ஹில், கூடவே டேயின் காதலியையும் எடுத்துக்கொண்டார் என்பார்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும், டே சார்பாக இந்த பொட்டல் காட்டை வாங்குவதற்கு பேரம் பேச, ஒரு தரகர் தேவைப்பட்டார். அந்த தரகர் திம்மப்பாதான் என்பதில் ஐயமில்லை.

கையில் இருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு பார்த்தால் அவரால் மட்டுமே ‘ஏன் மதராஸ்?’ என்ற கேள்விக்கு பதில் தர முடியும்.

புனித ஜார்ஜ் கோட்டையின் இரண்டு பிரதான வாயில்களுக்கு இடையே இருக்கும் சுவரில்தான், கிழக்குப் புறத்தில் இருந்து நுழையும் ஒரே கடற்கரை வாயில் இருந்தது. அந்தக் காலத்தில் அங்கிருந்து கடல் வரை மணல் மேடாகத்தான் இருந்தது.

குறுகிய இந்த நிலம் தான், கோட்டையின் மேற்கு பகுதியில் டேயும், மற்றவர்களும் அமைத்த குடியிருப்பு. இந்தப் பகுதி சில மீனவ குடும்பங்களும் இரு பிரெஞ்சு கபுசின் பாதிரியாளர்களும் வசித்த சிறிய கிராமத்துக்கு தெற்கே இருந்தது.

இந்த கிராமத்தின் பெயர் மாதராஸ்பட்னம் என்று சிலர் கூறுவர். அதன் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்பது பழங்கதை.

தன்னிச்சையாக செயல்பட்ட இந்த தலையாரின் வாழைத்தோட்டத்தை, தொழிற்சாலை அமைக்க தேர்ந்தெடுத்தார் டே. ஆனால் அவரால் தலையாரிடமிருந்து அந்த நிலத்தை பெற முடியவில்லை.

அப்போது, திம்மப்பா தலையிட்டு, தோப்பை கொடுத்தால் தொழிற்சாலைக்கு ‘மாதராஸன்பட்னம்’ என்று பெயரிடுவதாக வாக்களித்தாராம்.

எதிர்காலம் தன்னை நினைவில் வைத்திருக்கும் என்ற எண்ணம் மாதராஸனுக்கு உற்சாகத்தை அளித்தது. ஆனால், அரசியல்ரீதியாக அந்த மானியத்தை அளிக்கும் உரிமையுள்ள சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்கள் தந்தையின் ஞாபகார்த்தமாக அந்த குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்.

ஆகையால், ‘மாதராஸன்பட்னம்’ என்ற குப்பமும், ‘மதராஸ்பட்னம்’ என்ற கோட்டையும், விரைவில் வெளியூர் நெசவாளர்கள் குடியேறிய(1946–ல் கிடைத்த ஆவணங்களின்படி) சென்னப்பட்னம் என்ற அதன் இந்திய பகுதியும் உருவாகி இருக்கலாம்.

காலப்போக்கில் இந்த பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உலகம் ‘மதராஸ்’ என்று அழைக்க தொடங்கியது. நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்த பகுதியை சென்னை என்று அழைக்க தொடங்கினர்.

1642–ம் ஆண்டு விஜயநகர ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஸ்ரீரங்கராயா, தாமர்லா சகோதரர்களை பதவியில் இருந்து நீக்கினார். 1645–ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டிஷாருக்கு முதல் அரசியல் மானியத்தை அளித்தார். இதில், சென்னை, ‘எங்கள் ஊர் ஸ்ரீரங்கராயப்பட்டனம்’ என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த மானிய பத்திரத்தை தவிர வேறெங்கும் இந்த பெயர் தென்படவில்லை. நகரம் சென்னை என்றோ, மதராஸ் என்றோ, அவற்றின் திரிபுகளாலோ அழைக்கப்பட்டது. 1639–1640–ம் ஆண்டு நடந்த முதல் குடியேற்றத்துக்கு பின் அரசியல் பத்திரங்களில் ஆங்கிலத்தில் ‘மதராஸ்’ என்றும், தமிழில் ‘சென்னை’ என்றும் குறிக்கப்பட்டது.

350 ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று சுமுகமாக இந்த பெயர்கள் புழங்கியபோது 1996–ம் ஆண்டு நடந்த பெயர் மாற்றத்துக்கு என்ன பெரிய தேவை ஏற்பட்டது?

பெயர் மாற்றமோ என்னவோ, அன்றாடப் புழக்கத்தில் மதராஸ் இருந்தபோதிலும் மதராஸ்பட்னத்துக்கும், மாதாராஸனுக்கும் மேலும் விளக்கம் தேவைப்படுகிறது.

இரண்டு விடைகள் தரப்படுகின்றன. சாந்தோம்(சென்னை நிறுவப்பட்ட இடத்துக்கு தெற்கே 1520 வருட போர்த்துகீசிய குடியிருப்பு) ‘மாத்ரெ தெ தியா’ கோவிலில் தொழுத அந்த குப்பத்தில் வசித்த மீனவர்கள், அந்த மாதாவின் பெயரையும், தலையாரி தன் பெயரையும் தங்கள் கிராமத்துக்கு அளித்திருக்கலாம் என்பது ஒன்று.

அதைவிட அதிக சாத்தியம், சாந்தோமில் வசித்த மாத்ரா அல்லது மதேரா அல்லது ‘ம தெஇ ரோஸ்’ என்ற அந்த கிராமத்தின் தர்மகர்த்தாக்களான போர்த்துக்கீசிய குடும்பத்தின் பெயரை இந்த இருவரும் எடுத்துக்கொண்டனர் என்பது.

E2E6C6F6-B7AF-4ECE-B377-EB81EF36503E_L_styvpf.gif


அந்த காலத்தில் பணக்காரக் குடும்பங்கள், முழு கிராமங்களுக்கே உரிமையாளர்களாக இருந்தனர்.

முதலில் சாந்தோமிலும் பிறகு சென்னையிலும் மாத்ரா குடும்பம் முக்கியமானதாக இருந்தது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. 1920–ம் ஆண்டு சாந்தோமில் புனித லாசரஸ் சர்ச்சுக்கு புதிதாக பூஜையறை கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது, அந்த குடும்பம் மிகவும் கண்ணியமானது என்பதற்கு அடையாளமாக, அவர்களது கவசம் பொறிக்கப்பட்ட சமாதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கல்லில், 1637–ம் ஆண்டு அங்கு கூட்டாக கோவில் கட்டிய மானுவேல் மாத்ராவையும், வின்சென்ட் மாத்ராவின் விதவையான அவர் தாய் லூஸி ப்ராக்கையும் கவுரவிக்கும் வசனங்கள் இருந்தன.

1640–ம் ஆண்டு மயிலாப்பூரில் கட்டப்பட்ட அஸ்ஸம்ப்ஷன் சர்ச்சுக்கு அருகில் அவர்கள் வசித்தாக கேள்வி.

மற்றொரு மாத்ரா அல்லது மாதெரா, 1681–ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தளபதியாக இருந்த சாந்தோமை சேர்ந்த காஸ்மோ லொரன்ஸோ என்பவர், ஜான் பெரேரா என்ற வியாபாரியின் மகளை மணந்துகொண்டார்.

அவருடைய தோட்டம், ஒன்று பூங்கா என்று அழைக்கப்படும் பகுதி.

17–ம் நூற்றாண்டில் ‘மதீராஸ்’ குடும்பம் சென்னையின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக இருந்தது.

புனித தோமையாரின் கால் பட்ட இடத்தில் கட்டப்பட்ட டெஸ்கான்கோ தேவாலயத்தை கட்டியவர் காஸிமோ மதேரா. 1703–ம் ஆண்டு இறந்த அவர் இங்கு புதைக்கப்பட்டார். புகழ் பெற்ற வணிகரும் மாலுமியுமான லூயிஸ் அவர் மகன். அவரும் அவருக்கு பிந்தைய வருடங்களில் அவரது விதவை, திருமதி மதீராஸும் சென்னை அரசாங்கத்துக்கு கடன் கொடுத்தனர்.

ஆளுநருக்காக, ஒரு தோட்ட வீடு கட்ட மனை தேவைப்பட்டபோது, தன்னுடைய ஒரு வீட்டை திருமதி மதீராஸ், அரசாங்கத்துக்கு விற்றார். 16–ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் மதெரா அல்லது மதீராஸ் குடும்பம் சாந்தோம் வட்டாரத்தில் செழிப்பாக இருந்தது. அதற்கு முன் மதராஸ் என்ற இடத்தைப் பற்றி ஏடுகள் ஏதும் கிடையாது.

அந்த கடற்கரையில் நிறைய குப்பங்களுக்கு நிலச்சுவான்தார்களாக இருந்த இந்த பிரசித்தி பெற்ற குடும்பத்தின் பெயராக ஏன் அது இருந்திருக்கக் கூடாது?

பாரசீக மொழியில் முஸ்லிம் கல்வி கூடத்தை வர்ணிக்கும் மதரஸா ஒன்று அருகில் இருந்ததால், நகரத்தின் பெயருக்கு அது காரணமாக இருக்கலாம் என்பது மற்றொரு யூகம்.

ஆனால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் நிரம்பி இருக்கும் முஸ்லிம் குடியிருப்புகளும் அவற்றின் பள்ளிகளும் கல்லூரிகளும் 18–ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியவை. எனினும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆரம்ப காலத்தில் இருந்தே முஸ்லிம் படைத்தலைவர்கள் அந்த பகுதியை தாக்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன.

17–ம் நூற்றாண்டில் கம்பெனியின் கோட்டையில் கட்டப்பட்ட ஆளுநர் மாளிகையின் கூரை, குவிந்த முஸ்லிம் பாணியில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாரசீக மொழியில் எழுதப்பட்ட கர்நாடக நவாபின் சரித்திரங்களில் குறிப்பிடப்பட்ட ‘மஹராஸ் குப்பம்’ என்பது மரக்காயர் என்ற முஸ்லிம் மாலுமிகள் இருந்த ‘மரக்காயர் குப்பம்’ என்பதன் திரிபு என்று ஓர் எழுத்தாளர் விவரித்து இருக்கிறார். (அரபியில் மர்கப் = தமிழில் மரக்கலம் = கப்பல்)

மதராஸ் என்ற பெயருக்கு இந்தியாவில் வெவ்வேறு விளக்கங்கள் இருந்தாலும், அமெரிக்காவில் ஒரெகான் மாநிலத்தில் இருக்கும் மதராஸை பற்றி எந்தவித ஐயமும் கிடையாது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய இந்த ஊருக்கு இந்தியாவில் சென்னையில் தயாரிக்கப்பட்ட துணியில் அச்சடிக்கப்பட்ட பெயர் தற்செயலாக கிடைத்தது. இத்தகைய வியாபாரத்தின் மூலம் தான் சென்னை பிரபலம் அடைந்தது.

சென்னை எப்படி வளர்ந்தது என்பது வேறொரு கதை.

சென்னையை விட சரித்திரம் மிகுந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழும்பூர் போன்ற கிராமங்களுடன் ஜான் கம்பெனியின் நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக எவ்வாறு பிணைப்பு ஏற்படுத்தினர் என்பது தான் அந்தக் கதை.

ஆங்கிலேய சென்னையின் கதை. டேக்கு பின் தான் இன்றைய சென்னையின் சரித்திரம் குறிப்பிடத்தக்கதாக மாறியது.

வளரும் இந்த நகரம் தன்னுடைய ஆதாரத்தை கண்டுபிடிக்க இரண்டு நூற்றாண்டுகள் பின் நோக்கி பார்த்தால் போதும்.

கடலோரம் 20 கிலோ மீட்டர், உள் பக்கமாக 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் முட்டிய கடற்கரை. இந்த சீரில்லாத செவ்வகத்தின் பரப்பு 172 சதுர கிலோ மீட்டர், நீளமான இந்த நகரம், அட்ச ரேகையில், நிலநடுக் கோட்டுக்கு வடக்கே 13–வது ரேகைக்கு அருகிலும், தீர்க்க ரேகையில் 80–வது டிகிரியிலும் இருக்கிறது.

சுதந்திரம் கிடைக்கும் வரை, ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகளுடன் கிட்டத்தட்ட தென்னகம் முழுவதும் பரவி இருந்த சென்னை மாகாணத்தின் தலைநகரமாக சென்னை இருந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், 1956–ல் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திர பிரதேசம் உருவானது. 1968–ல் சென்னை மாகாணம் தமிழ்நாடாக மாறியது. 1998–ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, மாநகர எல்லைக்குள் 45 லட்சம் மக்களுடன், இந்தியாவின் நகரங்களுள் 4–வது பெரிய இடத்தை வகிக்கும், சென்னை, நாட்டில் தமிழ் பேசும் ஒரே மாநிலத்தின் தலைநகரமாகும்.

6B2B7DF3-3F8B-46DD-B4CA-3B77DC97A1DE_L_styvpf.gif




மற்ற 3 பிரதான நகரங்களை போல் பிரபலமாக இல்லாவிட்டாலும், நாட்டில் வேறு சில நகரங்களே இதைவிட அதிக வளர்ச்சி அடைந்திருந்த போதிலும், அவை அனைத்துமே, நவீன வளர்ச்சிக்கு வித்திட்ட சென்னைக்கு கடன்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

– வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.


















http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/08/16153708/August-22ChennaiBirthday.vpf
 
Whether people hail from Tamilnadu or Keala or Andhra or Karnataka...... that is immaterial;
all are "Madharaasis" for the north Indians.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top