P.J.
0
ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்கள் பட
ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை!
(22/10/2015)
கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் சென்னை விமான நிலையம், தற்போது ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்று புதிய சாதனை(?) படைத்துள்ளது.
'தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ் ' என்ற சுற்றுலா இணையதளம், உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையத்துக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள, ஒரே விமான நிலையம் சென்னைதான்.
இந்த பட்டியலில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. தாஷ்கண்ட் விமானநிலையம் 2வது இடத்தையும், காபூல் நகர விமான நிலையம் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.
இது தொடர்பாக 27 ஆயிரத்து 297 விமானப்பயணிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக 'தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ்' தெரிவித்துள்ளது.
http://www.vikatan.com/news/article.php?aid=54079