ஆனித் திருமூல வைபவம்
இன்று ஆனித் திருமூலம் - "ஸ்ரீசைலேச தயா பாத்ர " தனியன் அவதரித்த நன்னாள். நம்மரங்கத் திருமால் திருமுன்பே ஆசார்ய சார்வபௌமரான அழகிய மணவாள மாமுனிகள் ஓராண்டு திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் சாதித்து பூர்த்தி செய்த நன்னாள்.
ஸ்ரீ ரங்கநாதன் ஏன் மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் சாதிக்கும் படி நியமித்தான்? ஆளவந்தாரையோ உடயவரையோ ஈட்டின் ஆசிரியரான நம்பிள்ளயையோ சாதிக்கும் படி ஏன் நியமிக்கவில்லை?
இதற்கு முக்யமான காரணம் எந்த ஆசார்யரை சாதிக்கச் சொன்னாலும் அவர்களுக்கு முன்பிருந்த ஆசார்யர்கள் ஸ்ரீசூக்திகளை கொண்டு மட்டும் தான் அனுபவிக்க முடியும். ஆனால் மாமுனிகள் சாதித்தால் தான் குருபரம்பரையில் உள்ள அனைத்து ஆசார்யர்களின் சூக்திகளையும் ஒன்று சேர அனுபவிக்க முடியம் என்பதனால் தான் இந்த மஹாகார்யத்தை மாமுனிகளைக் கொண்டு பூர்த்தி செய்து கொண்டான் அழகிய மணவாளன். இது வெறும் பெருமைக்காக சொல்லும் வார்த்தையோ அல்லது உபசார வார்த்தையோ இல்லை என்பது மாமுனிகளின் வ்யாக்யான ஸ்ரீசூக்திகளை சேவித்தால் நன்கு விளங்கும். ஒரு இடத்தை விவரிக்கும் போது அதன் தொடர்பாக உள்ள அத்தனை ஆசார்யர்களின் ப்ரமாணகளையும் திரட்டி விளக்குவார் மாமுனிகள்.
மிகுந்த புத்தகம் மற்றும் அச்சு சௌகரியங்கள் நிறைந்த இக்காலத்தில் வாழும் நமக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் மாமுனிகள் காலம் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அடியோடு அழிந்திருந்த காலம். எந்த எந்த க்ரந்தத்திற்கு எந்த எந்த ஆசார்யர்கள் உறையிட்டு உள்ளனர் என்றே தெரியாத காலம் அது. மாமுனிகள் தான் கஷ்டப்பட்டு அனைத்து பூர்வாசார்ய வ்யாக்யானங்களையும் கண்டு பிடித்து ஒன்று திரட்டினார். இதை தாமே ஆர்த்திப் ப்ரபந்தத்தில் அருளிச்செய்கிறார் - "பண்டு பல ஆரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்து அருளும் பல்கலைகள் தம்மைக் கண்டு அதெல்லாம் எழுதி அவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்" என்று. அந்த வ்யாக்யானங்களை கண்டு பிடித்து சேகரித்ததொடு அல்லாமல் அத்தனை விஷயங்களையும் தம் நெஞ்சிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருந்து அதை அனுபவிப்பதையே போது போக்காகக் கொண்டார். அதையும் ஆர்த்திப் ப்ரபந்தத்தில் தெரிவிக்கிறார் "முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப்பெற்றோம் - முழுதம் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம் - பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேறாமல் பெற்றோம் " என்று. அதனால் தான் "ஈட்டுப் பெருக்கர்" என்கிற அசாதாரணமான திருநாமம் மாமுனிகளுக்கு ஏற்ப்பட்டது. ஸ்ரீ ரங்கநாதன் இயற்றிய "ஸ்ரீ சைலேச தயா பாத்ர" தனியன் அவதரித்த இந்நன்னாளில் மாமுனிகளின் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை வணங்கி நிற்போம்.
ஜீயர் திருவடிகளே சரணம்!