• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆவணி அவிட்டம் உபாகர்மா என்றால் என்ன? -Avani Avittam Upakarma

raghurraman

Member
.
ஆவணி அவிட்டம் என்றால்
வெறுமனே பூணல்
மாற்றிக்கொள்ளவேணும்

காமோகாரிஷித் என்று
ஒரு மந்திரம் காலையில் சொல்லனும்

பின்பு இட்லியோ டிபனோ சாப்பிடனும்
பின்பு
ஒரு சங்கல்பம் சொல்லி தீர்ததமாடி புது பூணல் போட்டுக்கனும்

அரிசி மற்றும் எள்ளால்
ரிஷிதர்பணம் பிதுர் தர்பணம் ( அப்பா இல்லாதவர்கள்) பண்ணனும்

ஆத்துக்கு வந்து கால் அலம்பணும் பின்னர் விருந்து ( ஆவணி அவிட்ட தளிகையை அசடு கூட செய்வாளாம் -

அவ்வளவு நேரமாகுமாம் இந்த கர்மாவை செய்ய) சாப்பிடனும் அவ்வளவுதான்

(இட்லி டிபன் சாப்பிடலையா இரண்டாம் குளியல் இல்லாமல் அப்படியே தொடரலாம் - யார் சொன்னார்களோ) ஆவணி அவிட்டம் எனநம்மில் பலரும் இன்றயஇளைய தலைமுறையினரில் மெஜாரிட்டி ஆனவர்களும் நினைக்கிறார்கள்

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

ஆவணிஅவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை

இதை பூர்வர்கள் உபாகர்மா என்பர்

ஆவணி அவிட்டம் என்றால் புது பூணூல் மாற்றி கொள்வது என்பது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும்

உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதுதான் உண்மையான ஒன்று

புராதனமான (ப்ராசீனமான) நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடுவது வழக்கம்

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் அதுமாதிரி வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் இந்த ஆவணி அவிட்ட பண்டிகைதான்

ஆவணியாவிட்டம் என்று சொல்லப்படும் இந்த பண்டிகை வேதத்தை தவிர வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை

இக்காலத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்து தான் கொண்டாடப்படுகின்றது என அறிந்துள்ளோம் என்றால் அது மிக மிக குறைவானவர்களே

சரி இதனை உபாகர்மா என கூறாமல் ஆவணி அவிட்டம் என கூறுவதேன்

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம்

மேலும் ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு

உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்

உபாகர்மா என்றால் என்ன

உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம் அதாவது வேதாரம்பம்

இதனை

ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத் என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்

அதாவது ஸ்லோகத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால்

ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமாகையால் ப்ரஹ்மச்சாரிக்கும் மற்றுமுள்ள க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதங்களை கற்க்க ஆரம்பிக்க வேண்டிய நன்னாள் அதாவது வேதாரம்பம் செய்ய உகந்த நாள் என்பது ஆகும்

வேத ஆரம்பம் என்றால் வேத்த்திற்க்கு முடிவு உண்டா

முடிவு இல்லை

ஆனால் தோஷம்உண்டாம் அதை போக்கி பின்பு மீண்டும் வேத ஆரம்பம் செய்யனுமாம்

வேதத்திற்க்கு தோஷமா என்னது ஸ்வாமி

ஆம் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம் (அதாவது மீந்து போய் ஜெலம் விட்ட ஆகாரத்தை பழையது என சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரியானது இந்த யாதயாம தோஷம்)

இந்த தோஷம் நீங்கவே ஆவணி அவிட்டம் என்னும் உபாகர்மா செய்யப்படுகின்றது

வேதத்திற்குபோய் பழையது என்ற தோஷம் எப்படி வரும் எனும் சந்தேகம் நமக்கு வந்தால் அது நியாயம்தான்

வேதத்திற்கு இயற்கையாக எந்த தோஷமும் வராது

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் (ரிஷிகளோ மகான்களோ அல்ல ) வேதத்தை பாராயணம் செய்வதனால் அதற்கு அப்படி ஒரு தோஷம் வருகிறதாம்

உதாரணத்திற்கு நாம் வழிபடும் அபிமான திவ்யதேச கோவில்களை எடுத்துக் கொள்வோம்

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பவித்ரோத்ஸவம் என நாம் ஏன் செய்கின்றோம்

அந்த கோவிலில் நடந்த விழாக்களில் உச்சரித்த மந்திர அபசாரம் நித்திய கைங்கர்யத்தில் ஆசாரகுறைவு தெரியாத தந்திர அபசாரம் என பலவற்றுக்கு பரிகாரம் காண வேண்டி செய்கிறோம்

அதே போல் வேதத்தை நாம் உச்சரிப்பதில் ஏற்பட்ட குறை ஒதுவதில் பின்னம் அடைந்த குறை சொல்லுவதில் அக்கறையின்மை வேகமாக சொல்லுதல் என பல விதமாக நாம் செய்த அபசாரங்களை போக்கவே இந்த உபாகர்மா என்னும் ஆவணி அவிட்டம்

இந்த உபாகர்மா வைபவத்தில் நாம் மட்டுமல்ல பகவானை தவிர முப்பத்து முக்கோடி தேவர்களும் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார்

வேதத்தை பிரம்மனோ ரிஷிகளோ இயற்றவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே

ஸர்வஞ்னான பகவான் ஸங்கல்பத்தால் உருவானது என அந்த வேதமே கூறுகின்றது

அதற்கான வாக்யம்:

ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி

பகவானின் அறிவான அந்த வேதத்தை அவர் முதன்முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார்

எப்படி உபதேசித்தார்

உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம் சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார்

ப்ரஹ்மாவிற்கு பிறகு அவரது வழிதொன்றல்களான ப்ரஜாபதிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் முதலானவர்கள் சந்தை திருவை என தினமும் சொல்லி வேதத்தை தங்களிடம் வரப்படுத்தினார்கள்

ப்ரஹ்மா பகவானிடமிருத்து வேதத்தை உபதேசம் பெற்ற நாள் இன்றுதான் ( ஆவணி அவிட்டம் அன்று தான்)

ஆதலால் இது வேதத்தின் உதித்த நாளாக்கான விழாவாகவும் கொள்ளலாம்

வேதத்தை கற்றவர்கள் யாராயினும் பகவானை தவிர வேதாத்யயனம் செய்தவர்கள் உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது

ஓய் ஸ்வாமி நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்கு உண்டா என்று சிலர் கேட்பது அடியேன் காதில் விழுகிறது

தேவரீர்கள் வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம் ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும் எதற்க்காக ஏன் செய்யனும்

அதாவது நித்யப்படி நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் மந்திரங்கள் மேலும் உச்சாடனம் செய்யும் காயத்ரி மந்திரம்

நாம் கலந்து கொள்ளும் பூஜை புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள் நாம் செய்யும் பிதுர் ச்ராத்தம் போன்ற கார்யங்களில் வரும் மந்திரங்கள் என நாம் வருஷம் முழுவதும் பல முறை பல வித மந்திரங்களை சொல்ல வேண்டியதுள்ளது இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும்

அதாவது நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும் என்கிறது சாஸ்திரம்

இப்போது புரிகிறதா ஆவணிஅவிட்ட உபாகர்மாவுக்கும் வேத ஆரம்பத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என

பொதுவாக பிராமணர்களில் ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது

அதாவது பூணூல் மற்றும் ப்ரம்மோபதேசம் ஆன மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை

அந்த பிரம்மசாரி முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்கின்ற யோக்யதை வருகின்றது

உங்களுக்காக உபாகர்மா அன்று நாம் செய்யும் சில வைதிக கர்மாக்களில் வரும் சில அற்புதமான விஷயங்கள் ஒரு கிளான்ஸ்

முதலில் ஒரு நூதன யக்ஞோபவீத தாரணம்

ஏற்கனவே நாம் கூறியபடி வேத
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் வேத முடிவு அதாவது உத்ஸர்ஜனம் ஒன்றும் இருக்க வேண்டும் இல்லையா

வேதத்தை யதோக்தமாக உத்ஸர்ஜனம் செய்யவேண்டும் இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக மிக குறைவு

ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக

காமோகர்ஷீத்... என்கின்ற ஜபத்தை இன்றயதினம் செய்கிறோம்

ஏனெனில் 'காமோகர்ஷித் என்ற ஜெபம் ஒரு சர்வ பாப ப்ராயஸ்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது

அதன் பின் மந்திரங்களை நமக்கு பிரம்மாவிடம் இருந்து ஆதியில் பெற்று தந்த ரிஷிகளையும் தேவதைகளையும் சங்கல்பத்தால் பூஜித்து அவர்களது தபசக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை பெற வேண்டி

இந்த ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம்

அதனை தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது

மேலும் இன்றய ஆவணி அவிட்ட உபாகர்மா அன்று சொல்லப்பட்டும் மஹா ஸங்கல்பம் மிகவும் உயர்ந்தது

{அந்த சங்கல்பத்தில் நாம் செய்த செய்யபோகிற பல ஜன்ம இந்த ஜென்ம ஒருவேளை அடுத்த ஜன்மம் இருந்தால் அந்த பாவங்களும் மனசால் வாக்கால் ரூபத்தால் செய்கையால் செய்த தவறான செயல்களுக்கும் நம் இந்திரியங்களால் செய்த தோஷங்களும் கனவில் நிஜத்தில் பகலில் இரவில் அறிந்தும் அறியாமலும் ஆச்சாரியரிடம் பெரியோர்களிடம் பட்ட அபசாரங்கள் நீங்குவதற்கான விசேஷ சங்கல்ப பிரார்த்தனை வாக்யங்கள் கொண்டது}

(இதன் பின்னர் மீண்டும் தேர்தமாடனும்)

{(இந்த ஸங்கல்பத்தை பக்தி ச்ரத்தையோடு சொல்லுவதால் செய்த பாவம் விலகி நல்ல பலனை சங்கல்பத்தை உணர்ந்து மீண்டும் அப்படியான செயல்களை செய்யாமல் இருக்கும் படியாக உண்மையாக சொல்லுபவர்களுக்கு அளிக்கும்
( பகவான் நம் பாவங்களை போக்க என்னபாடு படுகிறான் -அப்பாவை மதிக்காத இக்கால பிள்ளைகள் போல் நாம் தான் அதை உதாசீனம் பண்ணுகிறோம்)}

{அந்த சங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும் புண்ய க்ஷேத்ரங்களையும் புண்ய நதிகளையும் நாம் நிணைவிற்கு கொண்டுவந்து சங்கல்பம் செய்யவேணும்}

உபாகர்மா ஏன் செய்ய வேணும்

நாம் செய்யும் காரியங்களின் பலன் நமக்கு உறுதியாக கிட்ட வேண்டுமானால் அதாவது அந்த வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலமுள்ளதாக மாறி நமக்கும் பிதுர்களுக்கும் சந்ததிகளுக்கும் ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் கண்டிப்பாக ஆவணி அவிட்ட நாளில் நாம் இந்த உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும்

இந்த உபகர்மாவை செய்யாவிட்டால் பாவமா இல்லை தோஷம் ஏதும் வருமா

ஆம் பாவம் தான் உபாகர்மாவை இன்றய தினம் ச்ரத்தையாக அனுஷ்டானம் செய்யாவிடில் பாவம் மட்டுமல்ல பலவித தோஷமும் ஏற்படும் சந்தேகமே வேண்டாம்

இதை செய்வதால் நம்மிடமிருக்கும் அல்லது நமக்கு தெரிந்த சொல்ப வேத மந்திரமானது அதனது வீர்யத்தோடு நம்முடன் கூடியதாகயிருக்கும் அதன்மூலம்
நற்பலனை நமக்கு சேர்க்கும்

கூடுமானவரை வைதீகர் மூலம் செய்வதே உன்னதமானது

ஆடியோ வீடியோவை கொண்டு செய்வது நாமும் செய்தோம் என்ற திருப்திக்கு தானே தவிர பலன் கிட்டுமா என்றால் சந்தேகமே
*
என்ன அன்பர்களே ஆவணிஅவிட்டத்தை ஏனோ தானோ என அவசரம்அவசரமாக செய்யாமல் இந்த வருடம் முதல் - முறையாக செய்து வீரியத்துடன் அந்த அந்த வருடங்களில் நாம் செய்யும் கர்மாக்களின் பலனை பெற்று உய்வோமா

முக்கிய விஷயம்:- ஆவணி அவிட்டத்தன்று சந்தியாவந்தனத்திலும் அதிகமான காயத்ரி ஜெபம் கிடையாது

மறுநாள் குளித்து தீர்த்தமாடி நித்யானுஷ்டானம் செய்தபின் சங்கல்பம் மற்றும் காயத்ரி மந்தரஜெபம் ( 1008 பண்ணுவது நலம் - சந்தியாவந்தனத்தில் கூட ஒரு வேளைக்கு அதிகமாக 1008 என மூன்று வேளைக்கு 3024 மட்டுமே ஒரு நாளில் செய்யலாம் இன்றய தினம் கூடுதலாக 1008 செய்யலாம்)

காயத்ரி ஜெபத்தை பிரம்மசாரிகள் ஐந்து பாகமாக மெதுவாக உதடும் வாயும் அசையாமல் மனதிற்குள் சொல்லவேண்டும் அதாவது ௐ என்பதில் ஒரு இடைவெளி பூர்புவஸுப: என்பதில் ஒரு இடைவெளி கிரஹஸ்தர்கள் இந்த இரண்டையும் ஒன்றாக அதாவது ௐபூர்புவஸுப: என்று சொல்லவேணும் அதாவது நான்கு பாகமாக சொல்லவேணும்

வேகவேகமாக பதம் பிரிக்காமல் சொல்வதும் தவறு

காந்த்ரியை சப்தமாக பிறர் காதுபட சொல்வதும் தவறு
( பலர் ரிங் டோனாக ஆத்தில் இயந்திரம் மூலம் எப்போதும் ஒலிக்கும்படியாக -காலிங் பெல் அழைப்பொழியாக என வைத்து உள்ளனர் - அஅது மகாபெரிய தவறு மட்டுமல்ல பூமராங் போல் பல தோஷங்களையும் தரும்

எனவே காயத்ரி ஜெபத்தை முறையாக இன்றும் என்றும் செய்வது நலம்.

வருடாவருடம்,
அனைவரும் உபாகர்மா பிரஹ்ம யக்ஞம் அனுஷ்டித்து
அஷ்ட ஐஸ்வர்யம் பெருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: வலைதள பதிவு செய்தவர்
 

Latest ads

Back
Top