• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆவணி மாதம் விரதங்கள்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஆவணி மாதம் விரதங்கள்.

ஆடி மாத பன்டிகைகள்—தொடர்ச்சி.

13-8-2014;-- மஹா சங்கடஹர சதுர்த்தி.

1ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்.

ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.

“”சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்””

இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு

அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி. ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்

ஸமர்பயாமி; வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி;
ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;

கெளரீ புத்ராயகணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம:
அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி;
விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி

வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி;
21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;

தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி;
ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி; என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்

கண்ட 4 சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.

1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் யா தத்தம்
கணேச ப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம்,
இதமர்க்கியம், இதமர்கியம்;

2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்;
இதமர்கியம், இதமர்க்கியம்.

3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம்
ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.

4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே ஸர்வ ஸங்கஷ்ட நாசாய
சதுர்த்யர்கியம் நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.

கணபதியின் எதிரே தம்பதிகளாக உட்கார்ந்து கொண்டு “”ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா””

என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.

பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
 
ஆவணி மாத விரதங்கள்..

17-8-2014. கோகுலாஷ்டமி

ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமி திதி ரோகிணி நக்ஷத்திரம் அன்று நள்ளிரவில் கிருஷ்ணாவதாரம்.. இன்று கிருஷ்ணர் பூஜை,இரவில் உபவாசம், பகலில்.. ஶ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ண ஜனனம் ( பத்தாவது ஸ்கந்தம் மூன்றாவது சர்க்கம்) பாராயணம் செய்யலாம். அல்லது பாராயணம் செய்வதை கேட்கலாம்.

11-8-2014 முதல் 17-8 14 முடிய ஶ்ரீமத் பாகவதம் சப்தாஹ விதிப்படி ஏழு நாட்கள் பாராயணம் செய்யலாம். அல்லது 17-8-2014 முதல் 23-8-2014 முடியவும் பாராயணம் செய்யலாம். கர்போத்சவம் அல்லது ஜனனோத்சவம் என்று கூறப்படும் இவை ஒன்றில் பாராயணம் அல்லது பிறர் சொல்ல கேட்டல் செய்வது சிறந்தது.

(1() முதல் ஸ்கந்தம் முதல் ஸர்க்கம் முதல் 3ஆவது ஸ்கந்தம் 19 ஆவது ஸர்க்கம் முடிய. யக்ஞ் வராஹ சரித்ரம் –நிவேதனம்:-- சக்கரை வள்ளி கிழங்கு;, கடலை உருண்டை.
(2) 3ஆவது ஸ்கந்தம் 20 ஸர்க்கம் முதல் 5ஆவது சர்க்கம் 3ஆவது ஸர்க்கம் முடிய; த்ருவ சரித்ரம்;-நிவேதனம் பழ வகைகள்.

(3). 5ஆவது ஸ்கந்தம் 4 முதல் 7ஆவது ஸ்கந்தம் 5ஆவது ஸர்க்கம் முடிய
ஶ்ரீ ந்ருஸிம்மாவதாரம்—நிவேதனம்—பானகம்—நீர்மோர்.


(4). 8ஆவது ஸ்கந்தம் ஒன்றாவது ஸர்க்கம் முதல் 10ஆவது ஸ்கந்தம் 3ஆவது ஸர்க்கம் முடிய. பயோ விரதம். நிவேதனம்—பால் பாயாஸம்.

(5) 10ஆவது ஸ்கந்தம் 4 முதல் 10ஆவது ஸ்கந்தம் 54 ஆவது ஸர்க்கம் முடிய – ருக்மணீ கல்யாணம்—நிவேதனம்- பருப்பு தேங்காய்—பக்ஷணங்கள்.

(6). 10ஆவது ஸ்கந்தம் 55 ஆவது ஸர்க்கம் முதல் 11ஆவது ஸ்கந்தம் 13ஆவது ஸர்க்கம் முடிய. ---குசேலோபாக்யானம்—நிவேதனம்—அவல், பழம்.

(7) 11ஆவது ஸ்கந்தம் 14ஆவது ஸர்க்கம் முதல் 12ஆவது ஸர்க்கம் 13ஆவது ஸர்க்கம் முடிய --ஶ்ரீ பாகவத பூர்த்தி- நிவேதனம்- வடை; பாயஸம்; சக்கரை பொங்கல்.

இவ்வாறு செய்து வழிபடலாம்.. பாகவத ஸப்தாஹம் என்பது இம்மாதிரி பாராயணம் செய்வதே.

25-8-2014. பிரதக்ஷிண அமாவாசை.

அமாவாசை திங்கட்கிழமை காலை பத்து மணிக்குள்ளும் அதற்கு மேலும் என்று இருக்கிறதோ அன்று ப்ரதக்ஷிண அமாவாசை எனப்படுகிறது

திங்கட்கிழமை காலை .பத்து மணிக்கு மேல் அமாவாசை வந்தால் ப்ரதக்ஷிணம் கிடையாது.. அரச மரத்தை காலை பத்து மணிக்கு மேல் சுற்றக்கூடாது. மற்ற நாட்களில் காலை ஒன்பது மணிக்குள் சுற்றலாம்.

ஞாயிறன்று அமாவாசை வந்து அது திங்கள் கிழமை காலை பத்து மணி வரை அமாவாசை இருந்தாலும் ப்ரதக்ஷிணம் செய்யலாம்..ப்ரதக்ஷிண அமாவாசை தான்.

ப்ரதக்ஷிண அமாவாசை அன்று காலையில் 6 மணியிலிருந்து அரச மரத்தை பூஜை செய்து 108 முறை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.

ப்ரதக்ஷிணம் செய்யப் போகிற அரச மரத்துடன் வேப்ப மரமும் சேர்ந்து இருக்க வேண்டும்.. முறையாக அரச மரத்திற்கு பூணல் போட்டு வேப்ப மரத்துடன் ப்ரதிஷ்டை, திருமணம் செய்த அரச மரத்தை சுற்றுவதே சாலச் சிறந்தது..

முதலில் அரச மரத்திற்கு 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.. விரத பூஜா விதானம் புத்தகத்தில் உள்ள படி 16 உபசார பூஜை செய்த பிறகு சுற்ற ஆரம்பிக்கவும்.

எண்ணிக்கைக்காக முதன் முதல் ஆரம்பிக்கும் போது உருண்டை மஞ்சள் 108 எண்ணி வைத்து கொண்டு ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளாக அரச மர அடியில் ஒரு பாத்திரம் வைத்து அதில் போட்டு வரவும்.

அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 குங்கும்ம் பொட்டலங்களும், அதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 தாம்பூலம் ( இரு வெற்றிலையும் ஒரு பாக்கும் வைத்து கட்டி அதை போடவும்.

இதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவசை வரும் போது 108 புஷ்பம் போடவும். இதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது கொய்யா பழம், அல்லது. சப்போட்டா,

அல்லது ஆரஞ்சு , அல்லது எள்ளுருண்டை, வேற்கடலை உருண்டை, இம்மாதிரி எது வேண்டு மானாலும் உங்கள் செளகரியப்படி போட்டு சுற்றலாம்.

அமா ஸோம வார புண்ய காலே அச்வத்த ப்ரதக்ஷிணம் கரிஷ்யே என்று சொல்லி விட்டு சுற்றவும். சுற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்.

மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

அக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம் துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அச்வத்த சமயஸ்வ மே.

மரத்தின் அடிப்பகுதியில் ப்ருஹ்மாவாகவும், மரத்தின் நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவாகவும் மரத்தின் நுனி கிளை பகுதியில் சிவஸ்வரூபமாகவும் காட்சியளிக்கும் மரங்களின் தலைவனான ஹே அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

காரணமில்லாமல் கண்கள் துடித்தல், தோள்கள் மற்றும் கைகள் துடித்தல் ,, கெட்ட ஸ்வப்னம் ஏற்படுதல், மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றுதல், , எதிரிகளால் கஷ்டம் உண்டாகுதல் ஆகியவற்றிலிருந்து ஹே அரச மரமே என்னை காப்பாயாக.

முறையாக அரச மர ப்ரதக்ஷிணம் முடிந்தவுடன் இந்த 108 பழமோ பக்ஷணமோ இதை மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.

இதனால் மும்மூர்த்திகள் அருள் கிட்டும். பாபங்கள் விலகும் .ஏழரை சனியின் துன்பம் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

12 ஆண்டுகள் கழிந்த பிறகு ப்ரதக்ஷிண வ்ருதம் உத்யாபனம் செய்து விட வேண்டும் .வ்ருத சூடாமணி புத்தகத்தில் உத்யாபணம் செய்ய வேண்டிய முறை உள்ளது.

28-08-2014. ஹரிதாளிகா விருதம்.

பாத்ரபத மாத சுக்ல பக்ஷ த்ருதியை அன்று தேவியை பூஜித்து செய்ய வேண்டிய விருதம் இது. திருமணம் நடைபெற வேண்டிய கன்னி பெண்கள் இன்று மாலையில் தனது வீட்டில் வ்ருஷபத்தின் மீது பார்வதியுடன்

அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து கெளரீ ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி பூஜை அஷ்டோத்ர அர்ச்சனை செய்து பதினாறு தட்டுகளில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள் தேங்காய்

வைத்து நிவேதனம் செய்து தெரிந்த ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்தித்து “”மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னாப வ பார்வதி”” (ஸ்மிருதி கெளஸ்துபம்—208)

என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கவும். .பிறகு இந்த 16 தட்டுகளையும் எட்டு தம்பதிகளுக்கு கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறவும்.. இவ்வாறு

செய்வதால் பெண்கள் சாஸ்திர ஸம்மத முறையில் தாங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்..

ஹிமவான் தன் பெண்ணான பார்வதியை சிவனல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார். . பார்வதியின் தோழிகள் பார்வதியை வேறு ஒரு நதி கரைக்கு அழைத்து சென்று இந்த விரதம் செய்ய

சொன்னார்கள். . இதன் பயனாக பரமசிவன் நேரில் வந்து ஹிமவானின் ஸம்மதத்துடன் பார்வதியை ஏற்று கொண்டதாகவும் பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. . ஆகவே தான் “ஆலிபி; ஹாரிதா யஸ்மாத் தஸ்மாத் ஸா ஹரி தாளிகா “ என்பதாக ஆலி எனப்படும் தோழிகளால் அபகரித்து செல்லப்பட்டதால் இந்த விருதத்திற்கு ஹரிதாளிகா விருதம் எனப்பெயர் ஏற்பட்டது.

29-08-2014:--விநாயக சதுர்த்தி:
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ சதுர்தி திதி தான் விநாயக சதுர்த்தி. இன்று தனது வீட்டின் வடக்கு பகுதியில் ஒரு மண்டபத்தில் பச்சரிசி போட்டு பரப்பி அதில் எட்டு தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து அத்ன் மேல் களி மண்ணாலான பிள்ளையார் வைத்து அருகம்புல் சந்தனம்

ஆகியவற்றால் பக்தியுடன் பூஜிக்கவும்.

குறிப்பாக 21 அருகம்புல்லால் நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் தோய்த்து கீழ் கன்ட பத்து நாமாக்கள் சொல்லி இரண்டு இரண்டு அருகம் புல்லாலும் கடைசி ஒரு அருகம்புல்லால் பத்து நாமாக்களையும் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

1. கணாதிபாய நம: 2. உமா புத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. விநாயகாய நம: 5. ஈசபுத்ராய நம: 6. ஸர்வஸித்திதாய நம: 7. இபவக்த்ராய நம: 8. ஏகதந்தாய நம: 9. மூஷிக வாஹனாய நம: 10. குமார குரவே நம;

தூப தீபம் காண்பிக்கவும். நிவேதனம்_--நெய்யில் செய்த 21 கொழுக்கட்டை;
தேங்காய் 21; வாழைப்பழம் 21; நாவல் பழம் 21; விளாம்பழம் 21; கொய்யா பழம் 21; கரும்பு துன்டு 21; வெள்ளரிக்காய் 21; அப்பம் 21; இட்லி 21; செய்யவும்.

நடனம். பாட்டு. வாத்தியம், வேதம், புராணம் ஆகியவைகளுடன் பூஜை முடிக்கவும். 21 ப்ருஹ்மசாரி பையன்களுக்கு தக்ஷிணையுடன் நிவேதன பொருட்களை கொடுத்து , பெரியோர்களிடம் ஆசி பெறவும்.

மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை யதாஸ்தானம் செய்து விஸர்ஜனம் செய்யவும்.. எந்த காரியத்திலும் இடையூறு ஏற்படாது.
 
30-08-2014:-----ரிஷி பஞ்சமி—
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமியன்று மிக முக்யமான ஏழு ரிஷிகளை பூஜிக்க வேண்டும்.1. கச்யபர். 2. அத்ரி. 3. பரத்வாஜர். 4. விசுவாமித்ரர்; 5 கெளதமர். 6. ஜமதக்னி, 7 வசிஷ்டர். .

பென்களுக்கு மாதா மாதம் சம்பவிக்கும் அந்த மூன்று நாட்களிலும் பெண்கள் மிக கட்டுபாடுடன் நியமமாக இருக்க வேண்டும். மீறினால் அந்த பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறது வேத சாஸ்திரங்கள். .

ஐம்பது வயது மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி வ்ருதத்தை கணவனுடனோ அல்லது (கணவனில்லாத பெண்) தனியாகவோ செய்ய வேண்டும்.. .

ரிஷி பஞ்சமி அன்று காலை நதி, அல்லது, குளம் அல்லது கிணறு ஆகிய ஏதோ ஒன்றில் ஸ்நானம் செய்து நாயுருவி குச்சியைக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி 108 முறை பல் துலக்க வேண்டும்.

“ஆயுர் பலம் யசோ வர்ச்ச: ப்ரஜா: பசு வஸூநி ச ப்ருஹ்ம ப்ரக்ஞாம் ச மேதாம் ச த்வம் நோதே: வனஸ்பதி:” பிறகு நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும்.

பிறகு தன் வீட்டில் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து அந்த கலசங்களில் மேற்சொன்ன 7 ரிஷிகளையும் அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும்.

பிறகு ஏழு வேதாத்யானம் செய்த ப்ராஹ்மணர்களை வரித்து 7 ரிஷிகளாக பாவித்து ஸப்த ரிஷிகளுக்கு நிவேதனம் செய்ததை அந்த ப்ராஹ்மணர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

அன்று இரவு இந்த மஹரிஷிகளின் சரித்ரம் கேட்க வேண்டும். மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இம்மாதிரி ஏழு வருடங்கள் செய்ய வேண்டும்.,

இதனால் ஆத்யாத்மிகம், ஆதி பெளதிகம், ஆதி தைவிகம் என்ற மூன்று விதமான துக்கமும் விலகும். மங்களங்கள் வளரும். ஆபத்துகளில்லாத செல்வங்கள் வந்து சேரும். பெண்கள் ஸெளபாக்கியத்தை அடைவார்கள்/.

31-8-2014 ஸூர்ய சஷ்டி:--

தர்ம ஸிந்து-64 சொல்கிறது:--சுக்லே பாத்ரபதே சஷ்ட்யாம் ஸ்நானம் பாஸ்கர பூஜனம் ப்ராசனம் –பஞ்சகவ்யஸ்ய அச்வமேத பலாதிகம்.

பாத்ரபத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று காலையில் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக குளித்து விட்டு (நித்ய கர்மாக்களை முடித்து) கிழக்கே நோக்கி அமர்ந்து கொண்டு ஆதித்ய ஹ்ருதயம், கோளறு பதிகம் மற்றும் ஸூர்ய ஸ்தோத்ரங்கள் சொல்லி

பனிரண்டு முறை ஸூர்யனை நோக்கி நமஸ்காரம் செய்து ப்ரார்தித்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் பஞ்ச கவ்யம் சாப்பிடலாம்.. அனைத்து நோய்களும் விலகும். ஆரோக்கியம் ஏற்படும் என்கிறார் திவோதாஸர் எனும் மஹரிஷி..

02-09-2014 தூர்வாஷ்டமி

ஸிம்மே பாத்ரபதே மாஸி தூர்வா ஸம்ஞா ததாஷ்டமி என்பதாக ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும்… இன்று அருகம் புல்லை பூஜை செய்ய வேண்டும். . சுத்தமான இடத்தில் அருகம் பில்

வளர்ந்திருக்கும் இடம் சென்றோ அல்லது அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத்தில் வைத்து , அருகம்புல்லுக்கு சந்தனம் குங்குமம் இட்டு நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கலாம்.

“”ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்” (நிர்ணய ஸிந்து)

05-09-2014 விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி:--

இன்று மஹா விஷ்ணு படுக்கையில் புரண்டு படுக்கிறார். இன்று மாலை ஶ்ரீ லக்‌ஷ்மியுடன் மஹா விஷ்ணுவை பூஜை செய்து காய்ச்சிய பசும்பால் நிவேதனம் செய்யவும்.

ஹே வாஸுதேவ ஜகன்னாத, ப்ராப்தேயம் த்வாதசி தவ பார்ச்வேன பரிவர்தஸ்வ ஸுகம் ஸ்வபிஹி மாதவ. என்று ப்ரார்தித்து கொள்ளவும்.

06-09-2014 வாமன ஜயந்தி

காச்யபருக்கும் அதிதிக்கும் மகனாக மத்யான வேலையிலின்று அவதாரம் செய்தார். மாத்யானிகம் ப்ருஹ்ம யக்ஞம் செய்து விட்டு வாமன மூர்த்தியை பூஜை செய்துவிட்டு ஶ்ரீமத் பாகவத்திலுல்ல வாமனாவதார பகுதியை பாராயணம் செய்யவும். சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும்.

காலையில் ஸ்நானம் செய்து விட்டு வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.. இரு கைகலிலும் ஜலம் எடுத்து நமஸ்தே பத்மனாபாய நமஸ்தே ஜலசாயினே துப்யமர்க்க்யம் ப்ரயஸ்சாமி பால வாமண ரூபீணே வாமநாய நம: இதமர்க்கியம்.

நம: சார்ங்க தநுர் பாந பாணயே வாமநாய ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமநாய நமோ நம: வாமனாய நம: இதமர்க்கியம். ஜலத்தை பூமியில் பக்தியுடன் விடவும்.. அஹங்காரம் நீங்கும்.

7-9-2014 ஓணம் பண்டிகை.

மஹாபலி சக்ரவர்த்தியிடம் மூண்றடி மண் கேட்டு மஹா பலியை அளந்து ஏற்றுக் கொண்ட நன்னாள் இது. இன்று மஹா பலி சக்ரவர்த்தி ஆவணி திருவோணம் அன்று தான் ஆண்டு வந்த கேரள தேசத்தை காண வருகிறார். .
அவரை வரவேற்க பெருமகிழ்ச்சியுடன் வரவே.ற்கும் நாள் தான் ஓணம் .

8-9-2014 அனந்த பத்மநாப விரதம்:--
பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.

முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து

அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும். அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.

விரத பூஜா விதானம் புத்தகத்தில் பூஜை முறை உள்ளபடி பூஜை செய்யலாம்.
விரத சூடாமணி புத்தகத்தில் அனந்தன் ஆவரண பூஜையும் உத்யாபனம் செய் முறையும் உள்ளது.

9-9-2014:--உமா மஹேஸ்வர விரதம்.

பாத்ரபத மாத பெளர்ணமி அன்று உமா மஹேஸ்வரர் என்னும் பெயரில் உமாவுடன் சேர்ந்த சிவனை ஆராதிக்க வேண்டும்..

என்னென்ன விருப்பத்தை குறித்து யார் யார் செய்கிறாரோ அவர் தான் விரும்பும் அனைதையும் அடைவார் என்கிறது சிவ ரஹஸ்யம்.

உமா மஹேஸ்வர விருதத்தில் சிவனை 16 வடிவத்தில் 16 கலசங்களில் 16 பூக்களால் 16 வித நிவேதனம் செய்து பூஜிக்க வேண்டும்.15 வருடம் இம்மாதிரி செய்யலாம்… இரு பட்டு கயிரில் 15 முடிச்சுகள் போட்டு பூஜையில்

வைத்து கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. அனைத்து பாபங்கள் விலகி நல்ல தெளிவான ஞானம் பெறலாம். ஒரு ஏழை தம்பதிகளுக்கு வேட்டி, சேலை வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

முடியாவிட்டால் மூன்று வருடங்களாவது செய்யலாம். இந்த விரதம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இரவு சிவ புராணம் கதை கேட்க வேண்டும்.அல்லது படிக்க வேன்டும்.

1, உமா மஹேஸ்வரர்; 2. சிவ: 3. சர்வர்; 4. ருத்ரர். 5. பசுபதி. 6. உக்ரர்;7. மஹாதேவர். 8. பீமர்; 9. ஈசானர்; 10. உமாபதி. 11. சம்பு; 12. . சூலி; 13. அம்ருதேஸ்வரர்.14. வாமதேவர்; 15; காலகாமர்; 16. காலாத்மா.

இந்த விரதத்தை முழுமையாக செய்ய இயலாதவர்கள் 15 முடிச்சு போட்ட ஒரு பட்டு கயிறு சிவன் ஸன்னதியில் வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்து
நமஸ்தே கிரிஜா நாத பக்தாநா மிஷ்டதாயக ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம்

தவ பக்திஞ்ச தேஹி மே என்று ப்ரார்தித்து நம: பஞ்சதச க்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்தாய சம்பவே தயாகராய தேவாய சங்கராய நமோ நம: என்று சொல்லி நமஸ்கரித்து ஹர பாபானி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே

க்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவன்ணவாத்.என்று சொல்லி பட்டு கயிறை கையில் கட்டிக்கொள்ளவும்..

இந்த விருதத்தை முறையாக செய்வதால் நம்மிடமிருந்து பிரிந்து சென்ற உறவினர்கள்—செல்வங்கள்- சொத்துக்கள். –நல்ல குணங்கள் ஆகியவை நமக்கு திரும்ப கிடைக்கும்..
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top