இதுதான் இன்றய நிலையா...??...[ tvk ]
80களில் ஆரம்பித்தது இது.. பக்கத்து வீட்டு மாமி வந்து சொல்வார்: “ என் பையன் பிட்ஸ்பர்க்ல இருக்கான்...! ஆஹா..! என்ன ஊரு ...! பெரீய வீட...! ரெண்டு காரு வெச்சுண்ட்ருக்கா.... பையன் எப்பவும் பிஸி..! மருமாளே கார தனியா ஓட்டிண்டு போறா..!”
அவ்ளோதான்...! இந்த மாமியும் தம் பிள்ளை இந்தியாவில் இருப்பது தன் வம்சத்திற்கே மானக்கேடு என்று, அவனை பிடுங்கி எடுக்க, இப்படீ MIG குடும்பங்கள் எல்லோரும் பிள்ளைகளை யுஎஸ்ஸிற்கு அனுப்புவதை தவமாய் வரித்துக் கொண்டு, கடந்த 30 வருடங்களாக நம் இளைஞர்களுக்கு யுஎஸ் என்பதே வாழ்வின் ஒரே லட்சியமாகிப் போனது..!
மகன்/மகளை யுஎஸ்ஸிற்கு அனுப்பிவிட்டு, பிறகு பிரிவு தாளாமல், தானும் யுஎஸ் செல்லும் ‘பெருசு’களால், அங்கே ஒட்டி வாழ முடிவதேயில்லை..! அங்கே -10 குளிரில் அவர்கள் சென்னையின் வெயிலை தேடுகிறார்கள்..! சுத்தமான ரோடுதான்; ஆனால், அவர்கள் மனமோ கச்சேரி ரோட்டின் ‘கலகலப்பிற்கு’ ஏங்குகிறது..! வீட்டிற்குள்ளேயே, ‘பீட்ஸா’வோடு எத்தனை நாள் கிடப்பது..? ‘அப்டீ காலாற அயோத்தியா மண்டபம் போய், சூடாய் மிளகாபஜ்ஜி சாப்பிட’ மனம் அலைபாய்கிறது..! இருக்க முடியாமல், போன வேகத்தில் இந்தியா திரும்பி வந்து விடுகிறார்கள்..!
நாற்பது வயதில், யுஎஸ்ஸில் இருக்கும் ‘மகன்’களுக்கும் சீரியஸ் சிந்தனை வரத்தான் செய்கிறது..! இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள்..! ஆனால், ‘மருமகள்’ விடுவாளா..? அவளென்ன முட்டாளா..?
“இந்த வாழ்க்கை சந்தோஷமாய்த்தான் இருக்கிறதா..?” என்றே புரியாமல் அங்கே பிள்ளைகளும்....
நண்பர்களிடம்/சொந்தக்காரர்களிடம் பெருமை பேசிக் கொண்டு, ஆனால் ‘திரிசங்கு வாழ்க்கை’ கசந்து, மாற்றத்திற்கும் வழியே இல்லாமல், மனதிற்குள் புழுங்கிக் கொண்டு, இங்கே பெற்றோர்களும்....
உங்களிடம் வந்து “ பிள்ளை மினிசோட்டாவில் இருக்கான்..! அருமையான ஊரு...! ரோடு கண்ணாடி மாதிரி...! மூணு கார்...!” என்று நீட்டி முழக்கும் மாமா/மாமியிடம், அவர் முடித்தவுடன் “சரி.... அப்ப நீங்க ஏன் இங்கே இருக்கீங்க..? சந்தோஷமாத்தான் இருக்கிறீர்களா..?” என்று கேட்டுப் பாருங்கள்... அவர் கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர் துளி பார்ப்பீர்கள்....!
யுஎஸ் போவது/இருப்பதற்கு வெளிப்படையாய் சொல்லப்படும் காரணங்கள் தவிர, hidden காரணங்கள் என்று எனக்கு படுவது:
1. மனிதர்களுக்குள் பெருகி விட்ட 'ஈகோ'வால் சேர்ந்து வாழ்வது கடினமாகி விட்டது..! அதை ‘வெளினாட்டில் இருக்கிறான்’ என்ற ஒரு கௌரவமான காரணமாய் camouflage செய்ய முடிவது...
2. வெட்டி பந்தா...! “பக்கத்து வீட்டுப் பையன் யுஎஸ்ஸில்...! நீயும் போ.. இல்லன்னா அவளோட அலட்டல் தாங்க முடியாது..!”
ஆனால், பெற்றோர்களே, இது ரொம்ப யோசித்து எடுக்க வேண்டிய முடிவு..! பிறகு வேண்டாம் என்று நினைத்தாலும் உங்களால் மாற்ற முடியாமல் போய் மனக்கிலேசத்தோடு வாழ வேண்டியிருக்கும் என்பதை வலுயுறுத்திக் கூறவே இந்தப் பதிவு...!
Source: FaceBook..
TVK
https://www.facebook.com/shankar.rajarathnam.7/posts/1126203967408341?comment_tracking={"tn":"O"}