P.J.
0
இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர்களை முழ
இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர்களை முழுப் பணமும் கொடுத்து வாங்க வேண்டும்
Published: Thursday, January 1, 2015, 8:12 [IST]
டெல்லி: வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களை இன்று முதல் முழு விலையும் செலுத்தித்தான் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்ற திட்டம் நாடு முழுவதும் அமலாகிறது. இந்த சிலிண்டர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை முன்கூட்டியே வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தவிருக்கிறது.
மானியம் வேண்டாம் என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அல்லது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்காமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது. முழுத் தொகையும் செலுத்த வேண்டும். கேஸ் சிலிண்டர்களை இதுவரை மத்திய அரசு வழங்கும் மானியம் போக எஞ்சிய தொகை கொடுத்து நுகர்வோர்கள் வாங்கி வந்தனர். மானிய தொகையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி வந்தது. இப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு இன்னும் சுதந்திரம் அளிக்கும் வகையில் சந்தை மதிப்பில் இனி கேஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அதாவது கேஸின் சந்தை விலையைச் செலுத்தி வாங்கும் வழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் திட்டம் இது. இதன் முதல் கட்டமாக மத்திய அரசின் மானியம் நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் இன்று முதல் செலுத்தப்படும்.
மானியம் வேண்டாம் என்பவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்காது. புத்தாண்டின் முதல் நாளிலிருந்து நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
LPG Direct Subsidy Transfer from today | ????? ????? ?????? ???? ???????????? ?????? ?????? ???????? ????? ????????! - Tamil Oneindia