P.J.
0
இப்போதான் சந்தோஷமா இருக்கேன் - ஸ்கூல் டீச
இப்போதான் சந்தோஷமா இருக்கேன் - ஸ்கூல் டீச்சர் ஆன தேவயானி!
டீச்சர் ஆயிட்டீங்களாமே! வாழ்த்துக்கள் மேடம்!’’ என்று தேவயானியிடம் பேசினால், ‘‘இப்போ க்ளாஸ் நடந்துக்கிட்டிருக்கு. லஞ்ச் டைம்ல கால் பண்றேன்!’’ என்று பொறுப்பான டீச்சராய் பதில் சொல்கிறார் தேவயானி டீச்சர்.
யெஸ்! முன்னாள் கனவுக் கன்னி தேவயானி, இப்போது குழந்தைகளுக்குப் பாடம் புகட்டக் கூடிய நல்ல ஆசிரியராய் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘‘நடிக்க வரலேன்னா டீச்சர் ஆயிருப்பேன்!’’ என்று எப்போதோ சொன்ன தேவயானி, இப்போது அதை உண்மையாக்கி விட்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த அழகான டீச்சர்.
‘‘டீச்சர் ஆகணும்ங்கிறது எனக்குச் சின்ன வயசுலேர்ந்து ஆசை. நடிக்க வந்தப்புறம் செம பிஸியாகிட்டேன். நேரமே கிடைக்கலை. சரி; நடிப்பை கன்டினியூ பண்ணுவோம்னு டீச்சர் ஆசையைக் கொஞ்சம் தள்ளி வெச்சேன். இப்போதான் அதுக்கு நேரம் கைகூடி வந்துருக்கு.
ஏற்கெனவே டீச்சர் டிரெய்னிங் வகுப்பு போய்க்கிட்டிருந்தேன். சர்ச் பார்க்ல அஞ்சு நாள் டிரெய்னிங் போனப்போ, அவங்களாவே கேட்டாங்க. வாய்ப்பை விட வேண்டாம்னு ஒப்புக்கிட்டேன்.
அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் க்ளாஸ்ல உள்ள 45 குழந்தைகளும் என் மேல ரொம்ப பாசமா இருக்காங்க. பணம் சம்பாதிக்கறது மட்டும் வாழ்க்கை இல்லை; வாழ்நாளுக்குப்பின் அதையும் மீறி எதையாவது நாம் சம்பாதித்திருக்கணும். அதுதான் மனதிருப்தி தரும். அதனால எனக்கு பிடித்த ஆசிரியர் தொழிலை தேர்ந்தெடுத்தேன்“ என அழகாக சிரிக்கிறார் தேவயானி டீச்சர்.
அன்புடன் சேர்ந்த கண்டிப்பு பல குழந்தைகளை நல்வழிப்படுத்தும்! என் வாழ்க்கையிலேயே இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
ஆனா, இப்போதைக்கு நான் பார்ட் டைம் டீச்சர்தான். சர்ச் பார்க் ஸ்கூல், ஜெயலலிதா மேடம் படிச்ச ஸ்கூல்னு சொன்னாங்க. இன்னும் கொஞ்சம் பெருமை!’’ என்று விடுவிடுவென வகுப்பறைக்குள் நுழைகிறார் தேவயானி.
தேவயானி இப்போது, விஜயகாந்த் மகன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்திலும், பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் ஒரு படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வெல்கம் டீச்சர்!
- தமிழ்
http://news.vikatan.com/article.php?module=news&aid=35666&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1