உண்மையும், பொய்மையும்
உண்மையும், பொய்மையும்
உண்மை என்பது,
உள்ளதை உள்ளவாறு உரைத்தல்
எண்ணம், சொல், செயல் மூன்றுக்கும்
முரண்பாடு தோன்றாதவாறு நடத்தல்
தனக்கே ஐயப்பாடு உள்ளதைக்
கூறாது விடுத்தல்
எப்போதும் தனது நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ளாது இருத்தல்
யார் கேட்டாலும்,
ஒரே மாதிரி விடையிறுத்தல்
விளைவுகளைப் பற்றி அலசி ஆராயாமல்,
நடந்ததை உரைத்தல்
தனக்கு என்ன லாபம் என்று யோசியாமல்
தன்னலம் சிறிதுமின்றிச் செயல்படுதல்
பொய் என்று அறிந்ததைப்
பேசாதிருத்தல்
பேச வேண்டிய தருணத்தில்
சொல்ல வேண்டிய யாவற்றையும்
துணிவுடன் சொல்லுதல்
குழப்பமின்றி, மயக்கமின்றித்
தெளிவோடு பேசுதல்
பொருத்தம் இல்லாததை ஒதுக்கி விட்டு,
தேவையான அளவு மட்டுமே
பேசுதல்
சொல்லுபவர் எண்ணமும்,
கேட்பவர் புரிந்து கொள்வதும்
ஒரே நேர் கோட்டில் இணையுமாறு
உண்மையையே சொல்லுதல்
தான் சொன்னதையே
பின்னொரு நாளில் மறுக்கும்படி
நடவாதிருத்தல்
பிறர் மனம் குளிர்வதற்காகப் பேசாமல்,
நேர்மையாக நடந்து கொள்ளுதல்
பழி, பாவத்திற்கு அஞ்சாமல்
சத்தியத்தைக் காப்பாற்றச்
செயல் படுதல்
தன்னுடைய மறைவுக்குப் பிறகும்
தான் சொன்னதும், செய்ததும் நிலைத்திருக்கும்
என்ற அறிவோடு வாழுதல்
பொய்மை என்பது,
உண்மையை மறைத்தல்
நடந்ததைத் திரித்துக் கூறுதல்
தனக்குச் சாதகமான ஒரு பகுதியை மட்டும் சொல்லி விட்டு,
மீதியை விட்டு விடுதல்
பேச வேண்டிய நேரத்தில்
வாய் மூடி மௌனம் காத்தல்
உண்மைக்குப் புறம்பானவற்றை
உண்மை போலச் சொல்லுதல்
நேர் மாறானவற்றைக் கோவையாகப்
பிறர் நம்பும்படி எடுத்துரைத்தல்
இல்லாத ஒன்றை இருப்பது போலவும்,
இருப்பதை இல்லாததாகவும் சித்தரித்தல்
தன உள்ளம் ஒப்புக் கொள்வதைக் கூட
வெளிப்படையாக ஏற்க மறுத்தல்
கையில் கிடைத்த பணத்துக்காக
மனச்சாட்சியை விற்று விடல்
இனி கிடைக்கப் போகும் பலன்களுக்காகச்
சிறிதும் கூச்சமின்றிப் புளுகுதல்
பிறருடைய அச்சுறுத்தலுக்குப் பணிந்தோ,
ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியோ
வாய்மையற்ற சொற்களைப் பேசுதல்
அன்புக்குரியவரின் தூண்டுதலின் பேரில்
தன் நெஞ்சுரைப்பதைப் பொருட்படுத்தாது
உண்மையல்லாதவற்றைப் பேசுதல்
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு
உண்மையைக் குழி தோண்டிப் புதைத்தல்
புன்னகையோடு உண்மையைப் பேச ஆரம்பித்துப்
பற்பல பொய்களை இடைஇடையே கலந்து
மீண்டும் மலர்ந்த முகத்துடனே
சற்று உண்மையைச் சொல்லி முடித்தல்
பின் விளைவுகளை எண்ணி
நடந்ததை மாற்றிக் கூறுதல்
தகுந்த கவனமின்றியும் பொறுப்பின்றியும்
வாய்க்கு வந்ததைப் பேசுதல்
வெறும் நடிப்புக்காகத்
தயக்கமின்றிப் பொய்யுரைத்தல்
நாணமேதும் இல்லாமல்
சொல்லக் கூடாததைச் சொல்லுதல்
பிறர் நம்பவில்லை என்பதை உணர்ந்த பிறகும் கூடத்
தொடர்ந்து பொய் பேசுதல்
உண்மையும், பொய்மையும்
உண்மை என்பது,
உள்ளதை உள்ளவாறு உரைத்தல்
எண்ணம், சொல், செயல் மூன்றுக்கும்
முரண்பாடு தோன்றாதவாறு நடத்தல்
தனக்கே ஐயப்பாடு உள்ளதைக்
கூறாது விடுத்தல்
எப்போதும் தனது நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ளாது இருத்தல்
யார் கேட்டாலும்,
ஒரே மாதிரி விடையிறுத்தல்
விளைவுகளைப் பற்றி அலசி ஆராயாமல்,
நடந்ததை உரைத்தல்
தனக்கு என்ன லாபம் என்று யோசியாமல்
தன்னலம் சிறிதுமின்றிச் செயல்படுதல்
பொய் என்று அறிந்ததைப்
பேசாதிருத்தல்
பேச வேண்டிய தருணத்தில்
சொல்ல வேண்டிய யாவற்றையும்
துணிவுடன் சொல்லுதல்
குழப்பமின்றி, மயக்கமின்றித்
தெளிவோடு பேசுதல்
பொருத்தம் இல்லாததை ஒதுக்கி விட்டு,
தேவையான அளவு மட்டுமே
பேசுதல்
சொல்லுபவர் எண்ணமும்,
கேட்பவர் புரிந்து கொள்வதும்
ஒரே நேர் கோட்டில் இணையுமாறு
உண்மையையே சொல்லுதல்
தான் சொன்னதையே
பின்னொரு நாளில் மறுக்கும்படி
நடவாதிருத்தல்
பிறர் மனம் குளிர்வதற்காகப் பேசாமல்,
நேர்மையாக நடந்து கொள்ளுதல்
பழி, பாவத்திற்கு அஞ்சாமல்
சத்தியத்தைக் காப்பாற்றச்
செயல் படுதல்
தன்னுடைய மறைவுக்குப் பிறகும்
தான் சொன்னதும், செய்ததும் நிலைத்திருக்கும்
என்ற அறிவோடு வாழுதல்
பொய்மை என்பது,
உண்மையை மறைத்தல்
நடந்ததைத் திரித்துக் கூறுதல்
தனக்குச் சாதகமான ஒரு பகுதியை மட்டும் சொல்லி விட்டு,
மீதியை விட்டு விடுதல்
பேச வேண்டிய நேரத்தில்
வாய் மூடி மௌனம் காத்தல்
உண்மைக்குப் புறம்பானவற்றை
உண்மை போலச் சொல்லுதல்
நேர் மாறானவற்றைக் கோவையாகப்
பிறர் நம்பும்படி எடுத்துரைத்தல்
இல்லாத ஒன்றை இருப்பது போலவும்,
இருப்பதை இல்லாததாகவும் சித்தரித்தல்
தன உள்ளம் ஒப்புக் கொள்வதைக் கூட
வெளிப்படையாக ஏற்க மறுத்தல்
கையில் கிடைத்த பணத்துக்காக
மனச்சாட்சியை விற்று விடல்
இனி கிடைக்கப் போகும் பலன்களுக்காகச்
சிறிதும் கூச்சமின்றிப் புளுகுதல்
பிறருடைய அச்சுறுத்தலுக்குப் பணிந்தோ,
ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியோ
வாய்மையற்ற சொற்களைப் பேசுதல்
அன்புக்குரியவரின் தூண்டுதலின் பேரில்
தன் நெஞ்சுரைப்பதைப் பொருட்படுத்தாது
உண்மையல்லாதவற்றைப் பேசுதல்
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு
உண்மையைக் குழி தோண்டிப் புதைத்தல்
புன்னகையோடு உண்மையைப் பேச ஆரம்பித்துப்
பற்பல பொய்களை இடைஇடையே கலந்து
மீண்டும் மலர்ந்த முகத்துடனே
சற்று உண்மையைச் சொல்லி முடித்தல்
பின் விளைவுகளை எண்ணி
நடந்ததை மாற்றிக் கூறுதல்
தகுந்த கவனமின்றியும் பொறுப்பின்றியும்
வாய்க்கு வந்ததைப் பேசுதல்
வெறும் நடிப்புக்காகத்
தயக்கமின்றிப் பொய்யுரைத்தல்
நாணமேதும் இல்லாமல்
சொல்லக் கூடாததைச் சொல்லுதல்
பிறர் நம்பவில்லை என்பதை உணர்ந்த பிறகும் கூடத்
தொடர்ந்து பொய் பேசுதல்
Last edited: