• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உதகசாந்தியை பற்றி கேள்விப்பட்டிருப்போ&#2

Status
Not open for further replies.
உதகசாந்தியை பற்றி கேள்விப்பட்டிருப்போ&#2

உதகசாந்தியை பற்றி கேள்விப்பட்டிருப்போம். உதகசாந்தி என்றால் என்ன?
உத்தராயணம் வரப்போகின்றது. பல இல்லங்களில் அவர்களது குழந்தைகளுக்கு பிரஹ்மோபதேச வைபவம் நடத்த யோசித்து வரலாம். உபநயனத்தின் ஒரு அங்கமாக உதக சாந்தியும் உண்டு என நமக்கு தெரிந்திருக்கும்.
இதை பற்றி சற்று விரிவாக தெரிந்துக்கொள்ளுவோம்
இந்த உதகசாந்தி கர்மாவானது உபநயனம், சீமந்தம் ஆகிய விசேஷங்களுக்கு அங்கமாக, பூர்வாங்கமாக, செய்யப்படும். மிகவும் உசத்தியான கர்மாவாகும். ஒரு சிலர் விவாஹத்திற்கு அங்கமாகவும் செய்வர்.

அந்த உதகசாந்தியை பற்றி ஒரு வார்த்தை. இந்த பிரயோகம் போதாயன மகரிஷியினால் சொல்லப்பட்டதாகும்.
உபநயன கர்மாவிற்கு அங்கமாக செய்வதானால் கர்மாவுக்கு முந்தினம் சாயங்காலத்திலும் இதை செய்யலாம். சாயங்காலத்தில் செய்வதானாலும் ஸ்நான, மடி வஸ்த்ரங்கள் அவசியம்.

பூணுல் போட்டுகொள்ளும் பையனை க்ருஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காகவும், க்ருஹங்களின் தோஷம் ஏதவது இருந்தால் அவைகள் நீங்குவதற்காவும், பையனுக்கு புத்தி கூர்மை, தேஜஸ், ஆயுரார்பிவ்ருத்தி, வேத அத்யாயனம் செய்ய பூர்ண யோக்யதை ஏற்படுவதற்காகவும், எல்லோரும் சுபிக்ஷமாக இருப்பதற்காகவும், இந்த கர்மா செய்யப்படுகின்றது. இதனால் பல பாவங்களும் தொலைகின்றது.

லோக க்ஷேமார்த்தமும் இதில் பிரார்த்தனை உண்டு.

இதில் ஜபிக்கவேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.
இதில் என்னவெல்லாம் மந்திரங்கள் இருக்குத் தெரியுமா? பட்டியலை கேட்டால் பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும். இதோ நீங்களே பாருங்களேன்...

ரக்ஷோக்னம், ஆயுஷ்காமேஷ்டி மந்த்ரங்கள், ராஷ்ட்ரப்ருத், பஞ்சசோடா:, அப்ரஹிதம், சமகத்தில் ஒரு பகுதி, விஹவ்யம், ம்ருகாரம், ஸர்ப்பாஹுதி:, கந்தர்வாஹுதி:, அஜ்யாநி:, அதர்வஸிரஸம், ப்ரத்யாங்கிரஸம் ’ஸிகும்ஹே..’ எனத் துவங்கும் யக்ஞ மந்திரங்கள், ...என்ன படிக்கும்போதே உங்களுக்கு மூச்சு வாங்குகிறதா... அவசரப் படாதீர்கள்; பட்டியல் இன்னும் முடியவில்லை......தொடர்ந்து...

அன்ன சூக்தம், வாக் சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், ப்ரஹ்ம சூக்தம், கோ சூக்தம், பாக்ய சூக்தம், நக்ஷத்ர சூக்தம், பவமாந சூக்தம், ஆயுஷ்ய சூக்தம் முதலிய ஸ்ரேஷ்டமான வேத பகுதிகள் உதகசாந்தியில் இடம் பெறுகின்றது.

இப்பேற்பட்ட சக்தியும், மகத்துவம் வாய்ந்த இந்த உதகசாந்தி கர்மாவை நமது இல்லத்தில் ஏற்பாடு செய்யும்போது நாம் அதிக எண்ணிக்கையில் வைதிகாளை ஜபத்திற்கு அழைத்து ச்ரத்தையாக நடத்த சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.

ஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது.
அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்
 
ஸ்வாமின் தங்களுடைய திருப்பாதங்களில் முதற்கண் அடியேன் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிக்கின்றேன்.தாங்கள் கூறியபடி எந்த ப்ரஹஸ்பதிகள் அவ்வளவு மந்திரங்களையும் ஜெபிக்கிறார்கள் சந்தேகம்தான். அடியேன் கவனித்தவரையில் 2/3 ப்ரஹ்மோபதேசம்,ஒரு சீமந்தம் ,ஒரு சதாபிஷேகம் முதலிய சுபங்களில் வாத்தியார்கள் ஏனோ தானோ வென்று 30 நிமிடங்களில் உதகசாந்தியை முடித்துவிட்டார்களே. இந்த கொடுமையை எங்கு போய் சொல்வது.ஆனால் தக்ஷினையை தலா 1500/- வாங்கிக்கொண்டு போனார்கள்.இந்த கொடுமை ஏன் ? கர்த்தாக்களுக்கு மந்திரங்கள் தெரியாது.ஓர் விண்ணப்பம். தாங்களாவது நீர் கூறியபடி எல்லா மந்திரங்களையும் ஒன்று சேர்த்து ஒரு புத்தகம் வெளியிடக்க்கூடாதா? நீர் ஒருவர்தான் இதை செய்யமுடியும்.மற்றவர்கள் செய்யமாட்டார்கள்.என்ன நான் சொல்வது தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.அடியேன் ஏதாவது தவறாக கூறியிருந்தால் க்ஷமிக்கவும் ...நரசிம்ஹன்
 
உதகசாந்தி மந்திரம் என்பது முக்கால்வாசி பிராம்மணர்களாலும் படித்து மனப்பாடம் பண்ணக்கூடிய மந்திரங்கள் தான். யாஜுஷமந்திர ரத்னாகரம்* என்கிற புஸ்தகத்தில் (கிரந்த லிபி) ௨௫-லிருந்து ௮௪-வது பக்கம் வரைகிட்டத்தட்ட ௬0 பேஜுகளில் நிறைந்திருக்கிறது. கொஞ்சமாவது மந்திரங்கள் படித்து ஸ்வரஸ்தானங்களுடன் சொல்லத்தெரிந்தவர்களுக்கு இது ஒரு one year's hard exercise, at best. செய்ய முடிந்தால் மிகவும் நன்மை உண்டாகும்.

வைதிகவர்த்தினி ப்ரெஸ் & புக் டிப்போ, கும்பகோணம்
 
hi

i learned udagasanthi mantram from veda patashala.....we used to by heart without book.....now i can recite with out book....

still some times book needed...due to age...
 
உதகசாந்தி மந்திரம் என்பது முக்கால்வாசி பிராம்மணர்களாலும் படித்து மனப்பாடம் பண்ணக்கூடிய மந்திரங்கள் தான். யாஜுஷமந்திர ரத்னாகரம்* என்கிற புஸ்தகத்தில் (கிரந்த லிபி) ௨௫-லிருந்து ௮௪-வது பக்கம் வரைகிட்டத்தட்ட ௬0 பேஜுகளில் நிறைந்திருக்கிறது. கொஞ்சமாவது மந்திரங்கள் படித்து ஸ்வரஸ்தானங்களுடன் சொல்லத்தெரிந்தவர்களுக்கு இது ஒரு one year's hard exercise, at best. செய்ய முடிந்தால் மிகவும் நன்மை உண்டாகும்.

வைதிகவர்த்தினி ப்ரெஸ் & புக் டிப்போ, கும்பகோணம்

நேரடியாக பதில் கூறாமல் சுற்றி வளைத்து ஏதோ கூறினால் எப்படி.முதலில் புத்தகம் கிடைக்கவேண்டும் .அதற்க்கு பிறகுதான் படித்து மனப்பாடம் செய்வதை ப்பற்றி யோசிக்கவேண்டும் அடியேன் கேட்டது ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள் தமிழில் புத்தகம் வெளியிடக்கூடாதா என்றுதான். அவர் அதைப்பற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லை .தாங்கள் கூறிய புத்தகம் தமிழிலா அல்லது சமஸ்க்ரித்ததிலாஎன்றும் தெரியவில்லை. சமஸ்க்ரிதம் தெரியாதவர்கள் எப்படி பயனடையமுடியும்.sanskrit தெரிந்தவர்கள் தான் படிக்கவேண்டும் என்று ஏதாவது விதிமுறை உண்டா? தயை செய்து விவரமாக தெரிவிக்கவும்.
 
Swamin Pranams. You have posted right things. It shows yous self interest in vattheeka karma.
But now a days vathiyarkal are accepting more than one functions at times three or four also for the same
date. so they are in hurry in completing the function they also having thies assistance also.
In one functin the vathiyar chanting the mantran thebegining and the end only not full text
that kind of doing vaitheekam wothout mantraqlopan is rare on these days. but all are in compettiting
the dhakshina. unhless otherwise the kartha knows about these mantras most of the vathyars are hurry in
completing the muthrutham as early as p[ossib le. the Kartha also in busy in receving the guest and without
showing much interest in vaitheekam.

I am also doing vaitheekam at times. but they prppose swamin to perform the muthrutham as early a sposible.
even they are nort ready to sit in the manai to perform the vaitheekam. In the manai itself tehy arfe mostly engaed
with cellphjone and talking with others. Even if we say to do something they are now showing interst in that becasue of
lackof k nowledgte in nithyakarmas. also.

Realy I salute for your post. If possibel kindy print a book in Tamil. I know grantham but the book is useful of
others.

with poranams
Rajappa Namakkal.
 
நேரடியாக பதில் கூறாமல் சுற்றி வளைத்து ஏதோ கூறினால் எப்படி.முதலில் புத்தகம் கிடைக்கவேண்டும் .அதற்க்கு பிறகுதான் படித்து மனப்பாடம் செய்வதை ப்பற்றி யோசிக்கவேண்டும் அடியேன் கேட்டது ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள் தமிழில் புத்தகம் வெளியிடக்கூடாதா என்றுதான். அவர் அதைப்பற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லை .தாங்கள் கூறிய புத்தகம் தமிழிலா அல்லது சமஸ்க்ரித்ததிலாஎன்றும் தெரியவில்லை. சமஸ்க்ரிதம் தெரியாதவர்கள் எப்படி பயனடையமுடியும்.sanskrit தெரிந்தவர்கள் தான் படிக்கவேண்டும் என்று ஏதாவது விதிமுறை உண்டா? தயை செய்து விவரமாக தெரிவிக்கவும்.

Sir,

நான் சுற்றிவளைத்துச்சொல்லவில்லை; "கிரந்தலிபி" என்று பிரக்கெட்டில் எழுதியிருப்பதை நீர் தான் கவனிக்கவில்லை! கிரந்தலிபியென்றால் அந்தக்காலத்தில் எல்லா பிராம்மணர்களுக்கும் படிக்க தெரிந்திருந்தது. ஆனால் மந்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் தான் இருக்கும். நம்மில் முக்கால்வாசிப் பேர்களுக்கு ஸம்ஸ்கிருதம் தெரியாமல் போனதற்க்கு யார் பொறுப்பாளி? நாமும், இன்னும் சொல்லப்போனால் நம் பெற்றோற்களும் தான்.
புஸ்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் எழுதியிருந்தேனே — post-ஐ முழுதும் கவனமாக வாசிக்காமல் இப்படி ’அவசரப்பிச்சு’வாக ஏன் எழுதுகிறீர்கள்?
 
அடியேன் ஏதோ அச்சு பிச்சு என்று எதையும் சொல்வதில்லை .சர்மா சாஸ்திரிகளே புத்தகத்தை பிரசுரிக்கலாமே என்று தான் குறிப்பிட்டேன். போனது போகட்டும். அடியேனே இண்டெர்னெட்டில் தேடி தமிழிலும் சமஸ்க்ரிதத்திலும் முழு உதகசாந்தி மந்திரங்கள் pdf போர்மாட்டில் உள்ளதை கண்டுபிடித்துவிட்டேன்.பிரிண்ட் எடுக்க அடியேனிடம் பிரிண்டர்ஸ் இல்லை. எப்படியும் பிரிண்ட் எடுத்துவிடுவேன். தாங்கள் பதில் கூற எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு எனது நன்றியை தெறிவித்துக்கொள்கிரேன்.இதிலும் ஏதாவது தவறு இருந்தால் க்ஷமிக்கவும்.
 
Dear Narashimhan

Dear Narashimhan

thank kyou for your hard work in tracing the Udaga santhi mantrangal. My request is if you post the samein this forum then
it will be useful for all thowe who are intereted in knowing the manras. If poosible kindly uploan the same i this fourm

Pranams Rajappa Namakkal

dear Na
 
Dear Sri. Rajappa Sir, I am not a fully qualified IT man .கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு . However to help others I furnish below the URL and other details and you yourself could,if possible, take out a copy as it runs to more than 100 pages of 1/6 size. Please try out "udakashanti pdf in tamil". You will get a number of posts from which you can select one . Since the whole mantrams run to several pages it is not possible to upload...PSN
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top