V
V.Balasubramani
Guest
ஊழலில் சேர்த்த பாவ பணமோ ...???
ஊழலில் சேர்த்த பாவ பணமோ ...???
ரூபாய் நோட்டுக்களால் மாசுபடும் கங்கை
லக்னோ : ஏற்கனவே மாசுபட்டு கிடக்கும் கங்கை நதி, மத்திய அரசு வாபஸ் பெற்றதாக அறிவித்த ரூ.1000 நோட்டுகளால், மேலும் மாசடைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின்னர் கணக்கில் வராத கறுப்புப் பணத்தை பலர் தீயிட்டு எரித்தும், குப்பைத் தொட்டியில் வீசியும் வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், மிர்சாபூர் நகரின் அருகேயுள்ள நயாகட் பகுதி வழியாக பாயும் கங்கை நதியில் ஏராளமான 1000 ரூபாய் நோட்டுகள் மிதப்பதாக தகவல் வெளியானது.
இந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக நேற்று இங்குள்ள படகோட்டிகளுக்கு இடையே கடுமையான மோதல் நடந்ததாக அறியவந்த போலீசார், உடனடியாக நயாகட் பகுதிக்கு வந்தனர். கிழிந்த நிலையில் ஆற்றில் மிதந்த ரூ.19,000 மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக மிர்சாபூர் போலீஸ் சூப்பிரண்ட் கலாநிதி நைதானி தெரிவித்துள்ளார். மேலும் கணக்கில் வராமல் ஏராளமாக வைத்துள்ள சிலர் கங்கை நதியில், ரூபாய் நோட்டுக்களை வீசிவிட்டு, கங்கையில் நீராடிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
நன்றி http://www.dinamalar.com/news_detail.asp?id=1647313