வள்ளுவரைப் போற்றுவோம் ..... 406
சின்னக் கோபங்கள்!
தன் தலைவனுடன் பிணங்கி ஊடல் செய்யும் தலைவி,
தன் மனத்தில் எழும் சில எண்ணங்களைக் கூறுகிறாள்.
தன்னை வாழத்த வேண்டியேனும் அவள் பேசுவாளென
எண்ணிய தலைவன், தும்முகிறானாம். கூறுகின்றாள்,
'அவர் தும்மினால் நான் வாழ்த்துவேன் என்று அறிந்து,
அவர் தும்முகிறார், நான் ஊடலால் பிணங்கிய போது!'
'ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து'. என்கிறாள்.
கிளைகளில் மலர்ந்த பூக்களைக் கட்டி அணிகின்றான்
தலைவன்; உடனே 'யாருக்குக் காட்ட அணிந்தீர்?' என்று
கோபம் கொண்டு ஊடல் செய்கிறாள்; இந்தப் பொய்யான
கோபம் வெளிப்படுகிறது, மிக அழகிய இக் குறட்பாவில்.
'கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று'. இது மிகவும் நன்று!
மெய்யான அன்பு பெருகி வருவதால், தன் தலைவனிடம்,
பொய்யான கோபம் கொண்டு, ஊடல் செய்கிறாள் அவள்.
out: