வள்ளுவரைப் போற்றுவோம் ..... 407
விந்தையான சிந்தனைகள்!
தலைவனையே அன்புப் பெருக்கால் எண்ணிக் கொண்டு,
தலைவி வாழ்வதால், விந்தையான சிந்தனைகள் உண்டு!
வேறு யாரேனும் தன் தலைவனின் காதலைப் பெறுகின்ற
பேறு பெற்றார்களோ என்ற ஐயம், அவளுக்குள் எழுகிறது!
'யாரையும் விட உன்னிடம் அன்பு கொண்டேன்' எனக் கூற,
'யாரை விட? யாரை விட?' என்று கேட்டபடி ஊடுகின்றாள்!
'யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று'. இது குறட்பா.
எப்பொழுதும் உன்னைப் பிரிய மாட்டேன் எனச் சொல்லவே
எப்பொழுதும் விரும்புவான் அல்லவா தலைவன்? எனவே,
'இந்தப் பிறப்பில் பிரியேன்', என்று சொல்ல, அவள் உடனே
'மறு பிறப்பிலே பிரிவாயோ?' எனக் கண்ணீர் கொண்டாள்!
'இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்', என்கிறான்.
தன்னைத் தன் தலைவன் பிரிவானோ என்று அஞ்சியபடி,
தன் மனத்தில் பல சஞ்சலங்களைக் கொள்கிறாள் அவள்!
:decision: . . . :sad: