வள்ளுவரைப் போற்றுவோம் ..... 409
எதற்கும் கோபம்!
தலைவனின் மனம் முழுதும், தானே இருக்க வேண்டுகிற
தலைவி, பலவாறு அவனிடமே கோபம் கொள்கின்றாள்!
அவள் ஊடலைத் தீர்த்து, அவளிடம் அன்பு காட்டினாலும்,
அவள் அதற்கும் தன் கோபத்தைக் காட்டுகிறாள். 'நீங்கள்
என்னிடம் இவ்வாறு நடந்து கொள்வதைப் போலவே, பிற
பெண்களிடம் நடந்து கொள்வீரோ?' எனக் கேட்கின்றாள்!
'தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று', என்கிறான் தலைவன்.
தலைவியின் ஒப்பில்லா அழகை நினைத்து நோக்கினும்,
தலைவியோ அவனிடம் கோபம் கொண்டு ஊடுகின்றாள்!
'என்னுடைய அழகை யாருடன் ஒப்பிடுகின்றீர்கள்?' என்று
தன்னுடைய சந்தேகத்தை அவனிடமே கேட்கிறாள் அவள்!
'நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று'. கூறுவது தலைவன்!
ஊடலுக்கு எத்தனையோ காரணங்களைக் காட்டி, அவள்
ஊடல் செய்து, காதல் வாழ்வுக்குச் சுவை ஊட்டுகின்றாள்!
out: . . . 