வள்ளுவரைப் போற்றுவோம் ..... 411
யாருக்கு ஊடல் இன்பம் தரும்?
காதலர் எத்தன்மை உடையவரானால், தோன்றும் ஊடல்
காதலர்க்கு இன்பம் தந்திடும் என்று கூற விழைகின்றார்.
மண்ணில் நீர் விழுந்தால், உடனே அதனுடன் கலக்கும்!
எண்ணத்தில் இவ்வாறு ஒன்றுபட்ட காதலர் இவருக்குக்
கிடைக்கும் ஊடல் இன்பம், தேவர் வாழுகிற உலகிலும்
கிடைக்குமா, என வினவி, அதன் உயர்வைக் கூறுகிறார்!
'புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தோடு
நீரியைந் தன்னார் அகத்து', என்பது அந்த வினா!
தான் தவறே செய்யாத நிலையிலும், தான் விரும்புகின்ற
பெண் ஊடல் செய்வதால், அவள் தோளைச் சேர்ந்திடாது
பிரிந்து இருப்பதிலும், ஓர் இன்பம் உள்ளது என, ஊடலைப்
புரிந்து கொள்ள, நமக்கு வழி காட்டுகிறார் திருவள்ளுவர்!
'தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து'. இது குறள்.
எண்ணங்கள் ஒன்றுபட்டு வாழும் காதலருக்கு, ஊடலும்
எண்ண எண்ண இன்பம் தருவதாகவே அமைந்துவிடும்!
:dance: