வள்ளுவரைப் போற்றுவோம் ..... 412
இன்பம் தரும் ஊடல்!
ஊடல் செய்கின்ற தலைவியை ரசிக்கின்றான் தலைவன்;
ஊடல் இன்பம் என்னவென அறிந்து, அதை விரும்புகிறான்.
'நல்ல ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த அழகி
மெல்ல ஊடல் புரியட்டும்; அந்தப் பிணக்கைத் தீர்த்துவிட,
இரவெல்லாம் நான் அவளிடம் இரக்க வேண்டும்; எனவே,
இரவுப் பொழுது நீண்டு போகட்டும்', என்கிறான் தலைவன்.
'ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா'. இது அவன் குரல்!
காதலில் ஊடல் மிகவும் உயரிய நிலையில் இருக்கின்றது;
ஆதலால் ஊடல் செய்தல், இன்பமான ஒரு செயலேயாம்!
காதலுக்கு இன்பம் ஊடல்; அந்த ஊடலுக்கு இன்பம் எது?
காதலர் ஊடல் தீர்ந்து கூடி மகிழ்வதே, ஊடலுக்கு இன்பம்!
'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'. இது இறுதிக் குறள்!
காதல் வாழ்வின் நெளிவு சுளிவுகளை வள்ளுவத்தில் நாடி,
காதல் வாழ்வை செம்மைப் படுத்திட முயலட்டும் உலகம்!
:ranger: . . .
eace: