சிங்காரச் சென்னை!
அமெரிக்கப் பயணம் ஒரு வழியாக முடித்துவிட்டு,
அமர்க்களமாகத் திரும்பினோம் சிங். சென்னைக்கு!
எளிதில் சோதனைகளை முடித்து, வெளியில் வந்து,
விரைவில் வாடகை வண்டியில் இனிய இல்லத்துக்கு
வந்து சேர்ந்த பின், பிள்ளைகளுக்கு தொலைபேசியில்
வந்து சேர்ந்த விவரம் சொல்ல முயன்றால், இணைப்பு
இல்லவே இல்லை! கைப் பேசியில் சொல்ல விழைய,
இல்லவே இல்லை அதன் தொடர்பும்! மாதம் இரண்டு
முறையேனும் பேசாவிடின், இணைப்பு துண்டிப்பு! இம்
முறை அறியாது, 'சார்ஜ்' செய்ய எடுத்துச் சென்றேன்!
தொலைபேசி இணைப்பு இன்றேல், இன்டர்நெட் ஏது?
தொலைபேச விடியல் வரை காத்திருக்க வேண்டும்!
யாரோ விஷமமாக, பின்கட்டுக் குழாயை அதனுடைய
வேரோடு உடைத்து எடுத்துப் போயிருக்க, மேல் தொட்டி
நீரில்லாது வறண்டு கிடக்க, நல்ல வேளை வாளிகளில்
நீர் பிடித்து வைத்திருந்தார், தம்பியின் அன்பு மனைவி!
உறங்காமல் அந்த இரவு கழிந்திட, சூரியன் காலையில்
உதித்ததும் தம்பியின் இல்லம் சென்று, தொலைபேசி,
வந்த விவரம் சொன்னதும், பிள்ளைகளுக்கும் நிம்மதி.
இந்த அனுபவமும் எங்களுக்கு முதல் முறை ஆனதே!
மாலைக்குள் தொலைபேசி இணைப்பு வந்தது! ஆனால்
வேலை செய்யாது கணினி நின்று போனது; Fan அவுட்!
இதுதான் சிங்காரச் சென்னை வாழ்க்கை! அறிவோமே!
இனிதான் ஒவ்வொன்றாகப் பழுது பார்த்திட வேண்டும்!