நன்றி தெரிவிக்கும் நாள்!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன்,
அமர்க்களமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவதே,
நன்றி தெரிவிக்கும் Thanksgiving Day என்னும் விழா; இந்த
நன்றி தெரிவித்தல், ஆண்டவன் அருளிய நலன்களுக்காக.
ஆண்டவனை, தொடர்ந்து நல்வாழ்வு தரவும் வேண்டுவர்.
ஆண்டவனை நம்பாதோர், தனக்கு உதவி செய்வோருக்கு,
நன்றி பாராட்டி, அவர்களை அழைத்துப் பரிசுகள் வழங்கி,
நல்ல விருந்து படைத்து, கூடி உணவை உண்டு மகிழ்வர்.
வான்கோழிகள் தலை தெறிக்க ஓடும்! ஏன் தெரியுமோ?
வான்கோழிகளை வதைத்து உணவுகள் செய்வதால்தான்!
கருப்பு நிறம் லாபத்தைக் குறிக்குமாம்! மறுநாள் வெள்ளி;
விருப்புடன் தள்ளுபடி விற்பனை; அந்நாள் கருப்பு வெள்ளி!
விற்பனை செய்து, நிறைந்த லாபமும் பெற்று சிறந்திடவே
கற்பனை செய்து, குறைந்த விலையில் விற்க முனைவர்!
ஒரு போலீஸ் அதிகாரி, வண்டிகளின் நெரிசலால், இதைக்
கருப்பு வெள்ளி என்று கூறினார் என்றும் சொல்வதுண்டு!
நீண்ட வார விடுமுறையாக வருவதால், பலர் தவறாமல்
நீண்ட பயணம் செய்து, சுற்றம் நட்பைக் கண்டு மகிழ்வர்!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அல்லவா? இந்த நன்நாள்
கூடி மகிழ சந்தர்ப்பம் தருவதால், பொன்நாளே எனலாம்!
:grouphug: . . . :thumb: