இறை அருள் காக்கும்!
கெட்ட நேரத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும்,
கெட்ட செயல் நேர்ந்தால், வரும் மனதில் சலனம்!
இறை அருள் இருந்தால், கெடுதலும் குறைந்திடும்;
இறை மீது அதிக நம்பிக்கையும் தொடர்ந்து வரும்!
இந்த வாரம் எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவத்தை,
இங்கு சொல்ல விழைந்ததால் நான் எழுதுகிறேன்!
தொடர் மழை காரணமாகத் தெருக்கள் ஆறுகளாக,
இடர் வந்தது, வீட்டைச் சுற்றி நீர் நின்றுவிட்டதால்!
ஒரு எதிர்பாராத் தருணத்தில், நிலை தடுமாறியது;
மறு நொடி என்னைத் தரையில் விழவும் வைத்தது!
இங்குதான் இறையருள் காத்தது என்கிறேன்! ஆம்;
எங்கும் எலும்பு முறிவு இன்றி அவனருள் காத்தது!
வலி சிலநாள் அனுபவிக்கவே வேண்டும்; ஆனால்,
துளி கட்டிக் கையைக் காக்க வேண்டியது இல்லை!
வேலை செய்யும் என் வேகம் குறைந்தே போனது!
வேலை செய்யும் பொழுது 'சுலோ'ச்சனா இப்போது!
பக்தியுடன் சக்தி வினாயகனையே வேண்டுவேன்;
சக்தி அளித்து அவனருள் காக்குமென நம்புவேன்!
ray2: