விதியின் சதியா?
படித்த பெண்; வேலை சென்னையில்; M D
படிக்கும் டாக்டர் பையனின் ஜாதகம் சேர,
திருமணம் பேசப் பெற்றோரும் முயன்றிட,
ஒரு விஷயம் மட்டும் சரி வரவே இல்லை!
டாக்டர் வசிக்கும் மும்பையின் விடுதியில்,
டாக்டரின் மனைவிக்கு மட்டுமே அனுமதி!
மூன்று ஆண்டுகள் சொந்தங்கள வராததை,
என்று அனுமதிக்கவே இயலாது எனக் கூறி,
சென்னையில் வேலை பார்க்கும் ஒருவன்
செவ்வனே தேடப்பட்டு, கல்யாணம் முடிய,
பிரச்சனை தொடங்கியது, இல்வாழ்விலே!
பிரபலமான கம்பெனியில் சிறந்த வேலை
பெண்ணுக்கு, அவள் செல்ல மறுத்த அதே
பொன்னான மும்பை நகரிலே; அவளோ
வந்த சந்தர்ப்பம் சிறந்தது என்று எண்ணி,
சொந்தங்களை விட்டு மும்பை சென்றிட,
ஒற்றைப் பிள்ளையை மும்பை அனுப்பச்
சற்றும் அவன் அம்மா சம்மதிக்காததால்,
அங்கு வேலை தேடும் படலத்தை, அவன்
அப்போதே விட்டு விட்டான்; ஒருவேளை
பெண்ணுக்குச் சென்னையில் நல்ல பணி
எண்ணும்படிக் கிடைக்காமலே போனால்,
இவர்களின் திருமண வாழ்வு என்னாகும்?
இதுவே விதியின் விளையாட்டு என்பதா?
:noidea: