ஒரே இறையின் புகழ்.
இசை நிகழ்சிகளுக்கு ஒரு தலைப்பு அளித்து,
இசை விருந்துகள் படைக்கும் கலையரங்கம்.
அஞ்சா நெஞ்சன், அஞ்சனா புத்திரன், பக்தன்
ஆஞ்சநேயன் பற்றிப் பாட ஒரு முயற்சி. நாம்
வெளியே செல்லும்போது, யாரேனும் நண்பர்
எதிரே வந்தால் மனதில் மகிழ்ச்சி வந்திடும்.
அதே போல, தெரிந்த பாடல்கள் சில கேட்டால்,
அதே போன்ற மன நிறைவை அது தந்துவிடும்!
புதிய பாடல்களே தொடர்ந்து வரும்போது, நாம்
புதிய இடத்தில் யாரையும் அறியாத சூழலிலே,
திசை அறியாது நிற்பது போன்ற உணர்வு வரும்!
இசைக் கலைஞர்கள் இதை உணருவது தேவை.
புதிய பாடல்கள் பலமுறை கேட்டால், அவையும்
புதிய இணைப்பாக ரசிகர் மனதில் பதிந்துவிடும்.
புதுப் பாடல்கள் பழகும் வரை, தெரிந்த பாடல்கள்
புதுப் பால்களுடன் இணைந்து வழங்குவது நலம்!
:juggle: