தேசபக்தி...
தேசபக்தி மனதில் கொண்டு, தம் தாய்நாட்டை
நேசமுடன் காத்திடப் பலர் முனைவதில்லை!
சுதந்திர தாகம் பெருக்கெடுத்த அந்த நாட்களில்,
சுதந்திரம் வேண்டுகின்ற உணர்வைத் தூண்டப்
பல பாடல்களும் எழுதினர்; அந்தப் பாடல்களை
பல நாடகங்களில் பாடவும் பலர் உழைத்தனர்.
பாரதியார் மட்டுமன்றி, வேறு பலரும் சுதந்திரப்
பாக்களை இயற்றும் பணியைச் செய்தனர்; ஒரு
இசை விற்பன்னரிடம் வந்தது கேள்வி ஒன்று;
இசையால் தேசபக்தி வளர்க்க முடியுமா என்று!
அவர் சர்வ நிச்சயமாகக் கூறினார், முடியுமென!
அவர் கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை!
தேசபக்திப் பாடல்களை மக்கள் மிக ரசித்தாலும்,
தேசபக்தியை அப்பாடல்கள் வளர்க்க முடியுமா?
திரைப்பட ரசிகர்களோடு ஒப்பிடும்போது, நல்ல
இசையை ரசிப்பவர்களின் சதவிகிதம் குறைவே!
வன்முறை தாண்டவமாடும் பற்பல படங்களால்,
வன்மையான சொற்களின் உபயோகமே பெருகி,
சின்னக் காரணங்களுக்கெல்லாம் அடிதடியுடன்
எண்ண முடியாத பொதுச் சொத்துச் சேதங்களும்
நடப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோமே! இந்த
நடவடிக்கைகளை மாற்ற இசையால் இயலுமா?
சிரிக்கவும் சிந்திக்கவும் அக்கலைஞர் சொன்னார்
சிறிய ஒரு விஷயம்; எல்லோருமே ரசித்தனர்!
'கச்சேரி முடிந்ததும் நான் அமர்ந்த ஜமக்காளம்
கச்சேரிக்குப் பரிசாக எனக்கு வழங்கப்பட்டால்,
அந்த நிமிடமே சக கலைஞர்கள் உபயோகிக்கும்
எந்தப் பொருளையும் சிந்தாமல் சிதறாமலிருக்க
கேட்டுக் கொள்வேனே!' என அவர் சொன்னதும்,
கேட்டிருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர்!
நம் பொருள் என்றவுடன் வருகின்றதே அக்கறை;
நம் நாடு என்னும்போது வருமா அதே அக்கறை?
:angel: