சற்றே விலகி...
இசைக் கலைஞர்கள் சர்க்கஸ் வித்தை போல
இசையை அளிப்பது, தொன்றுதொட்டே உண்டு.
இசையின் அன்னையும், தந்தையும் எனப்படும்
இசையின் சுருதியும், தாளமும் மாறிவிடாதபடி,
கவனமாகச் செய்வார்கள், ரசிகர்கள் அகமகிழ!
அவலமாகிவிடுகின்றன வித்தைகள், இப்போது!
சங்கதிகள் சேர்க்க வேண்டுமே என்று எண்ணி,
பங்கம் செய்கின்றார், நல்லிசை வடிவங்களை!
இறுதியில் அனாதை சங்கீதம்போல் ஆகிறது,
இறுதி வரை சுருதி சேராமல், தாளமும் பிசகி!
கயிற்றின் மீது நடப்பவர், கீழே விழாதவரையே
பயிற்சியின் மகிமையைப் பறைசாற்றிடுவார்!
அரும் இந்த விஷயம், கலைஞர்கள் மனத்தில்
வரும் நாளே, ரசிகர்களின் பொன் நாள் ஆகும்!
:juggle: