சாக்கலேட் கிளாஸ்!
என்னிடம் இசை பயின்ற மாணவி;
இன்று முதுகலைப் பட்டம் பெற்றிட
அமெரிக்க நாட்டில் படிப்பவள்; ஒரு
அதிகாலை என்னிடம் பேசினாள்.
விடுமுறைக்கு இந்தியா வந்ததால்,
எடுக்க வேண்டும் சில கிளாஸ்கள்
என்று வேண்ட, நான் சரி என்றேன்!
நன்று என்று, சாக்கலேட் கொஞ்சம்
எடுத்து வந்து கொடுத்து, விடாது
எடுத்துக் கொண்டாள், கிளாஸ்கள்!
எட்டு வகுப்பு முடிந்த நன்னாளில்,
குட்டிக் கண்ணம்மாவின் வருகை!
நேர நெருக்கடி; அதனால் கிளாஸ்
நேரம் ஒதுக்க முடியாது போனது!
வந்தாள் முன்தினம் அந்த மாணவி;
செய்தாள் எங்களுக்கு நமஸ்காரம்!
சென்றாள் விடை பெற்றுக்கொண்டு;
சென்றாள் என் Fees தராமலே! நான்
தேங்காய் மூடிக் கச்சேரி சிலமுறை
பாங்காய் செய்துள்ளேன், சிறுமியாக!
இப்போதுதான் தெரிந்தது, அதேபோல
இப்போது தேங்காய் மூடி = சாக்கலேட்!
:tsk: