எளிய வாழ்வு!
கூட்டம் முட்டி மோதும், பேருந்தில் ஏற
நாட்டம் இல்லை, வயதின் காரணத்தால்!
ஐந்து மணி நேரம், வாடகைச் சீருந்திலே,
சென்று சுற்றத்தைப் பார்த்து வருவோம்.
எளிய வாழ்வு வாழ்ந்திட விரும்புவதால்,
ஏ. சி. சீருந்தை மறுக்கவே விழைவோம்.
ஆனால், இன்று நிலை வேறு; வெளியே
போனால், ஏ. சி வண்டிதான் கிடைக்கும்!
குளுமை வேண்டாம் என்று மறுத்தாலும்,
குளுமை வண்டியின் வாடகை தரணும்!
நெருக்கடியைக் குறைத்திட, இதுவும் ஒரு
அருமையான யோசனைதான்; இனிமேல்,
அத்தியாவசியத் தேவை இல்லையெனில்,
அனைவரும் வீட்டிலே அடைந்து கிடப்பர்!
:lock1: