குடுமியோ குடுமி!
உயர் குலத்தினர் என்று அலையாளம் காட்ட,
உயர்வாக எண்ணிப் போற்றினர், குடுமிகளை!
காலத்தின் கோலத்தால், சில வகுப்பினர், ஒரு
காலத்தில், குடுமிகளை வெட்டிட முயன்றனர்!
ஆங்கில ஆதிக்கத்தால், ஒட்ட வெட்டிய சிகை,
பாங்காக ஏற்கப்பட்டது, பாதுகாப்புக் காரணமாய்!
சரித்திரம் மீண்டும் திரும்பும் என்பர்; அதுபோல,
விசித்திர வருகையாகக் குடுமி திரும்புகின்றது!
பெண்களும் குட்டை முடி வைக்கும் காலத்தில்,
ஆண்கள் நீண்ட முடி வைக்க விழைகின்றனர்!
எந்த நாடு, எந்த இனம் என்ற பாகுபாடு இல்லாது,
வந்தது இந்தப் பழைய சிகை அலங்காரம்! அதில்,
அழகாய் ரப்பர் வளையம் இடுவதும் உண்டு; மிக
அழகாய்ப் பின்னல் போல் பின்னுவதும் உண்டு!
அமெரிக்க நாட்டில், என் காமராவில் சிறைப்பட்ட
அமர்க்களமான ஒரு சிகை அலங்காரம், இதோ!
