வன்முறை ஏன்?
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
இந்தப் பழமொழி எல்லோரும் அறிந்ததுதான்.
இளம் பருவத்தில் மனத்திலே விதைத்திடும்
அரும் பண்புகள், நன்மக்களை உருவாக்கும்.
இன்று வெளிவரும் சில செய்திகள், நிம்மதி
கொன்றுவிடும் வகையிலே இருக்கின்றன.
பள்ளிச் சிறுவன் ஒருவன், தனக்குப் பிடிக்காத
பள்ளி ஆசிரியையைக் குத்திக் கொன்றான்!
தாய்க்கு இணையாக உள்ள ஆசிரியையிடம்
சேய் போலப் பழகாத காரணம்தான் என்ன?
வன்முறையைக் காட்டும் திரைப்படங்களா?
வன்முறையை வளர்க்கும் video game களா?
பணிவையே கற்றுத் தராத பெற்றோர்களா?
பண்பையே கற்பிக்காத பாடத் திட்டங்களா?
நம் சமுதாயத்தைச் சீர் கெடுக்கும் இவற்றை,
நம் முயற்சிகளால் மாற்றவே முடியாதோ?
:noidea: