வாலண்டைன் தினமே வருக!
புதிய தலைமுறை வேண்டுவது, என்றும்
புதிய விதமான கொண்டாட்டங்களையே!
வித விதமாகப் பணம் செலவு செய்து, புது
விதக் கேளிக்கைகளை நாட விழைகிறார்!
காதலர் தினம் என்று வாலண்டைன் தினம்,
காதலர் எல்லோரும் எதிர்பார்க்கும் தினம்!
இந்த தினம் பற்றி வேடிக்கையாக உலவுகிற
இந்த விஷயத்தை பகிரவே, எழுதுகின்றேன்!
அழகிய பெண் ஒருத்தி, வாழ்த்து அட்டைகள்
அழகாக அடுக்கிய கடைக்குச் சென்றாளாம்.
'எனக்கு, நீ மட்டுமே முதலும், கடைசியுமான
மனதிற்குப் பிடித்த வாலண்டைன்' என்பதை,
எழுத்துக்களாய் வடித்த அட்டையைக் கேட்க,
எழுந்தது கடைக்காரருக்கு மனதில் ஆனந்தம்!
'இது போன்ற பெண்ணை, நான் இது வரையில்
பொதுவாகப் பார்த்தது இல்லை, அம்மா!' எனச்
சிரித்தவாறு சொல்லி, ஓர் அட்டையை எடுக்க,
சிரித்தவாறே அவள் கண்களை மூடி, எண்ணி,
மெதுவாக விரல்களாலும் எண்ணி, கேட்டாள்,
'விரைவாக ஒன்பது அட்டைகள் தாருங்களேன்!'
:grouphug: