யூகம் எப்போதும் சரியே!
அனுபவம் மிக்க மருத்துவர் ஒருவர்; தன்னை
அணுகும் கர்ப்பவதிகளுக்குப் பிறக்கப் போவது
என்ன குழந்தை என்பதை, மிகவும் துல்லியமாக
எண்ணிச் சொல்லுவார், முதல் வாரத்திலேயே!
தான் மறக்காதிருக்க, தனது பெரிய 'டைரி'யிலும்,
தானே குறித்து வைப்பார், சொன்ன மறு நிமிடம்!
சரியாகக் குழந்தை பிறந்தால், இனிப்பு வந்திடும்!
சரியில்லை எனச் சிலருக்கு, சந்தேகம் வந்திடும்!
சந்தேகப்படுவோரிடம், தனது டைரியைக் காட்டி,
சந்தேகம் தீர்ப்பார், சரியாக யூகித்ததாக! அவர்கள்,
அவசரத்தில் தாங்கள் தவறாக எண்ணிவிட்டதாக
அவரிடம் உரைத்து, இனிப்பும் வழங்கிடுவார்! இது
எப்படி சாத்தியம் என்ற வியப்பு வருகிறதா? இதோ
எப்படி இது சாத்தியம் என்று விளக்கிக் கூறுகிறேன்.
ஆண் குழந்தை என்று கூறிவிட்டால், பெண் என்றும்
பெண் குழந்தை என்று கூறிவிட்டால், ஆண் என்றும்
அந்த 'டைரி'யில் எழுதிவிடுவார் அவர்! சரியாகவே
அந்த யூகம் இருந்தால், சந்தேகமே வந்து விடாதே!
தவறாக யூகம் இருந்தால்தான், சந்தேகம் வந்திடும்;
தவறில்லை எனக் காட்ட, 'டைரி' குறிப்பு உதவிடும்!
eace: