சிவராத்திரி.
சிவராத்திரி பற்றி, பழமொழி ஒன்று உண்டு;
சிவராத்திரி வந்தால், சிவ சிவ என்று குளிர்
போகும் என்று! இந்த வருடம் புதுமை ஒன்று!
நாளும் காலை அலாரம் போல எழுப்பி விடும்
பேரோசையுடன் போகும் சில விமானங்கள்,
பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்க, மிகவும்
குளிர் வந்து உடலை வாட்டி வதைக்க, பெரும்
புதிர் போல இருந்தது, நேற்று விடியற்காலை!
இனிய பயணங்களைத் தடுத்திடும், மிக அடர்
பனி மூட்டம்! Scarf உடன் மனித நடமாட்டம்!
தொலைக்காட்சி செய்திகளில்தான் தெரிந்தது,
தொலை தூரம் செல்லும் விமானம் முதலாக,
உள்நாட்டு விமானங்களும் திசை திரும்பியது!
உண்மையில் இது அடிக்கடி நடக்காத சம்பவம்!
சென்னையை விட்டுக் குளிர் செல்லும் முன்பு,
தன்னை முழுமையாக வெளிப்படுத்தியதோ?
:smow: