பத்தாவது கிரஹம்!
மணப் பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகத்தில்
தினப் பொருத்தம் முதல், கிரஹப் பொருத்தமும்
தேடித் பார்ப்பது, நடைமுறையில் நாம் காண்பது!
நாடிச் செல்வது, திறமை உள்ள ஜோசியர்களை!
ஆனால், இந்த ஒன்பது கிரஹங்களைத் தவிரவும்
ஆளும் பத்தாவது கிரஹம், முன் நாளில் இருந்தது!
மாப்பிள்ளை எனும் ஒரு புதிய கிரஹம்தான் அது!
மாப்பிள்ளை என்று கூறித் துரும்பைப் போட்டால்,
அதுவும் துள்ளிக் குதித்தது, அந்தக் காலம்! அவன்
எதுவும் செய்வான் என்று பயமே எல்லோருக்கும்.
அவன் விருப்பப்படிப் பெண் வீட்டார் மாறுவதும்,
அவன் முதல் மரியாதை பெறுவதும் தொடரும்!
உணவு விஷயத்திலும் அவனுக்கே முன்னுரிமை;
உணவு வகைகள் தயாராகும், அவன் விருப்பப்படி!
இன்று பெண்கள் உயர் கல்வி கற்பதால், நிலைமை
இன்று மாறிவிட்டது! பத்தாவது கிரஹம் இல்லை!
eace: