'கிரிகெட்' மதி கேடா, சீர் கேடா?
வெவ்வேறு விதமான பைத்தியங்கள் பிடிக்கும்,
வெவ்வேறு மனிதர்களுக்கு! பணம், புகழ், இசை,
நாடகம், நாட்டியம், உடைகள், நகைகள் என்று,
தாகம் கொள்ளும், பலவிதமான பைத்தியங்கள்!
விளையாட்டுப் பைத்தியங்கள் இதில் ஒரு வகை.
விளையாட்டைக் கண்டே, ஆனந்தம் அடைவார்.
'கிரிகெட்' என்ற இந்த விளையாட்டிலே ஒன்றி,
மதிகெட்டு இருப்போர், பரந்த உலகில் ஏராளம்!
காண்பதுடன் நில்லாது, பல போட்டிகளில் கலந்து
கொள்வதுடன், பணம் கட்டி விளையாடுகின்றார்!
ஒரு ஓவரில் எத்தனை ஓட்டங்கள் எடுப்பார்கள்?
இது ஒரு கேள்வியாகி, பரிசும் அளிக்கிறது! பலர்
அலைபேசியும் கையுமாக.... இல்லை, காதுமாக
அலைவதை கண்டால், மனதில் வேதனைதான்!
படு தோல்வி அடையும் அதே குழு, மறு தினமே
படு வேகமாக விளையாடி, வெற்றி பெறுகிறதே!
பெரும் பணம் புரளாமல், இவ்வித மாற்றங்கள்
வருவது என்பது, எப்படி சாத்தியம்? அல்லவா?
'கிரிகெட்' பரப்புவது மதிகேடா இல்லை சமூகச்
சீர்கேடா என்று பட்டி மன்றமே நடத்தலாமோ?
:argue: