விண்வெளி நிகழ்வு!
பூமிக்கு அடுத்துள்ள வெள்ளிக் கிரஹம்,
பூமி - சூரியனின் நேர்கோட்டில் நுழைந்து,
தன் பாதையில் செல்லும்போது, அழகாக
அதன் நிழல், மிளகு வடிவில் கடந்திடும்!
நாசா வல்லுனர், ஹவாய்த் தீவிலிருந்து
மேலான நிகழ்வை ஒளிபரப்ப விழைந்து,
கணினியில் முழுவதும் காண வைத்து,
இனிய காலைப் பொழுது தந்தனர்! சிறு
இடையூறாக, சாலை இடும் தொழிலால்
தடை வந்தபோதும், அதையும் வென்று,
முழுவதும் இந்த விண்வெளி நிகழ்வை,
அழகாக நாம் கண்டு களிக்க வைத்தனர்!
எட்டு ஆண்டுகள் இடைவெளியில் இது
எட்டாத உயரத்திலே நிகழ்ந்திடும்; இது
விஞ்ஞானிகளுக்கு, கிரஹங்கள் பற்றிய
வியப்பான பல உண்மைகளைத் தரும்!
ஒரு நூற்றாண்டில் இரு முறை நிகழ்வது,
இருபதாம் நூற்றாண்டில் நிகழவில்லை!
1874 - 1882 முந்தைய ஆண்டுகள்; அடுத்து
2004 - 2012 ஆம் ஆண்டுகள்! அடுத்ததாக
அடுத்த ஜோடி ஆண்டுகள் 2117 - 2125! இதை
அடுத்த இரு தலைமுறை காண முடியாது!