ஆனந்த வாழ்வு பெற!
வேலைக்குச் சென்று சம்பாதித்து,
வேளைக்கு வீடு வந்து சேர்ந்து,
மனைவி மக்களுக்காக உழைத்து,
தினம் அதே முகங்கள் பார்த்து,
வாழ்வில் நொந்து நூலாகாத ஒரு
வழி தேடினான், ஒரு சமர்த்தன்!
காவியுடை அணிந்து , மரத்தடியை
நாடி, நல்ல சொற்கள் சில சொல்ல,
மக்கள் கூடி, உணவு வகைகள் தந்து,
தங்கள் குருவாக அவனைச் செய்து,
வெளிநாட்டு பக்தர்கள் ஓடி வந்து,
வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு
காணிக்கை செலுத்த, ஒரே ஆண்டில்
கணக்கில்லாச் செல்வமாகப் பெருக,
ஆனந்த சுவாமிகளாக பவனி வந்து,
ஆட்சி செய்கிறான் பக்தைகளோடு!!
:hail: . . . :grouphug: