அளவுக்கு மிஞ்சினால் ...
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்!
அளவினை எதிலுமே நாம் அறிதல் நலம்!
வாழ்வில் செல்வச் செழிப்பைக் காணாது,
வாழ்ந்து வருகின்ற எளியவர் எவருக்கும்,
லக்ஷங்களில் வரும் பரிசு, மிக அவசியம்;
லக்ஷ்மியின் முழு அருளாகவே இருக்கும்.
ஏழ்மை நிலை இருந்தும், IAS அதிகாரியாகி,
தாழ்மை நிலைமையைத் தகர்க்க எண்ணி,
தன் இலக்கு ஒரு கோடி ரூபாய்தான் என்று,
நன்றாக விளையாடினாள், லட்சியப் பெண்!
பன்னிரண்டரை லக்ஷம் வரை, கவனமாய்
எண்ணி விளையாடியவள், அளவு இல்லா
நம்பிக்கை கொண்டு, தவறான பதில் கூறி,
நம்பி வந்த பெருந்தொகையை இழந்தாள்!
நான் ஆடித்தான் போய்விட்டேன்! பாவம்!
தன் எண்ணமே தகர்ந்திட, என்ன அதிர்ச்சி!
அழக்கூடத் தெரியவில்லை! நீண்ட சில
ஆழ்ந்த மூச்சுக்கள் விட்டு, வருந்தினாள்!
தன் அதீத நம்பிக்கையால் தோல்வியென,
தான் வருந்திப் பல முறைகள் சொன்னாள்!
விளையாட்டை விட்டிருந்தாலே லாபம்;
விளையாட்டாய் நினைத்ததால் நஷ்டம்!
நம்பிக்கை வளர்ப்பது மிக அவசியம்; அதீத
நம்பிக்கை இருந்தால் அது அறியாமையே!
:loco: