பழகப் பழக.....
'பழகப் பழகப் பாலும் புளிக்கும்', என்று
பழமொழி சொல்லுவதை அறிவோம்!
இல்லற வாழ்வில் இதுபோல இராது,
இல்லாள் கணவனைப் பற்றிப் புரிந்து,
அன்பைப் பெருக்கி வளர்த்தல் நலம்;
பண்பான வாழ்வு வருவது திண்ணம்!
நாற்பது ஆண்டுகள் கூடி இருந்தவர்,
ஏற்பது விவாக ரத்து எனும் பொழுது,
'என்னதான் வாழ்வில் அறிந்தீர்கள்?'
எனும் கேள்வி உதிக்கும் அல்லவா?
நூற்றிப் பதினைந்து ஆண்டுகள் கூடி
ஒற்றுமையாக வாழ்ந்த, அரிய வகை
ஆமைகள் இரண்டு, வெறுப்படைந்து
தாமே தமக்குள் சண்டை இட்டதில்,
பெண் ஆமை உடைத்தேவிட்டதாம்,
ஆண் ஆமை ஓட்டில் ஒரு பகுதியை!
விந்தையான இந்த ஜோடி போலவே
சிந்தையில் யாரும் எண்ணக் கூடாது!
அன்பின் அஸ்திவாரத்தில் வாழ்வை
நன்கு அமைத்து, உலகில் உய்வோம்!
Fighting turtles. Photo courtesy: Google images.
