இயற்கை மருத்துவமா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால்,
என்னவெனக் கேட்கும் காலத்தில், பலரும்
மூட்டு வலியால் நொந்து நூலாவதை, நாம்
கேட்டு வருகிறோம், சிறு வயதினரிடமும்!
பரவலாகப் பேசப்படுகிற இயற்கை மருந்து,
பலராலும் பாராட்டுப் பெற்றதாகச் சொல்லி,
மூன்று மாத உபயோகத்தில், எப்படிப்பட்ட
மூட்டு வலியும் மறைவதாக உரைத்து, நம்
இணைய தளத்திலும் தரிசனம் தருகிறது,
இனிய காலைப் பொழுதிலிருந்து! இதிலே
முக்கியப் பொருள், மாடு, எருமைகளின்
முன் அழகு கூட்டும் கொம்புகள் தருவதே!
கொம்புகள் தரும் பொருளை, எப்படி நாம்
நம்புவது, சைவ உணவில் சேர்த்தி என்று?
மருத்துவம் படித்த சகோதரர் சொன்னதால்,
கருத்துடன் நானும் கேட்டுக் கொண்டேன்!
விலங்குகள் தந்திடும் பொருள் சேர்த்ததை,
அலுங்காமல் இயற்கை மருந்தே என்கிறார்!
இயற்கையாய் வளரும் கொம்புகள்; மருந்து
இயற்கையே என்று இதனால் கூறுகிறாரோ?
:noidea: