என் அன்புத் தந்தை!
அன்னை என்னை ஈன்ற பொன் நாளில்,
தந்தை ஆனாதால் அகம் மிக மகிழ்ந்து,
மழலை மொழிகள் நான் பேசிட, அவை
குழலை, யாழை விஞ்சியதாக எண்ணி,
காலத்திலே கசடறக் கற்பவை கற்பித்து,
ஞாலத்திலே சிறப்பு நான் பெற உழைத்து,
தோளை மிஞ்சிடத் தோழியாக மதித்து,
நாளை உன்னதக் குடிமகளாக நானுயர,
நல்ல ஒழுக்கங்களின் முன்னோடியாய்,
நல்ல வழிகாட்டியாய் எனக்கு அமைந்து,
அருமையான வாழ்வு தந்த என் தந்தையே!
பெருமையுடன் போற்றுவேன் உன்னையே!
தந்தையர் தினத்தில் மட்டுமே எண்ணாது,
சிந்தையிலே வைப்பேன் அனுதினமுமே!
நிதம் என் உயர்வாலே எண்ண வைப்பேன்,
'தவம் இவள் தந்தை செய்தாரோ?' என்றே!
ray: . . . :hail: