கல்யாணமாம் கல்யாணம்!
'நான் ஒரு மென்பொருள் பொறியாளர்-
தான், அதுவும் அமெரிக்காவிலே' என்று
அறிவித்தால், பெண்கள், பெற்றோரும்
அறியாமல், திருமணம் செய்திடுவார்!
அமெரிக்க I T பொறியாளர் என்று கூறி,
அமெரிக்க நாடு செல்ல ஆவல் கொண்ட
பெண்கள் பதினேழு பேர்களை, ஒருவன்
தன் மனைவிகள் ஆக்கிக்கொண்டான்!
பேராசை பெரு நஷ்டம் என்பதற்கு, இது
ஏற்ற உதாரணம் ஆகின்றது அல்லவா?
பெற்றோர் அறியாது மணப்பது, மேலும்
பெற்றோர் விசாரிக்காது விடுவது, என
இரண்டு காரணங்கள், ஏமாற்றுவோரை
இந்த தைரியம் கொள்ள வைக்கின்றது!
திருமணம் செய்வது, மணந்த இருவரும்
அருமையான வாழ்வினை அமைக்கவே
என்று, எப்போது மக்கள் அறிவார்களோ,
அன்று வந்திடும் மணவாழ்வுக்கு மதிப்பு!
:high5: