நவீன மதன காமராஜன்?
இளம் ஜோடிகள் 1006 ஒரே முகூர்த்தத்தில்,
இணை சேர்ந்து, இல்வாழ்வில் நுழைந்தனர்.
விலைவாசி உயர்வில், தாலி உட்படத் தந்து,
தலைமை தாங்கி J J அம்மா நடத்தக் கண்டு,
ஆச்சரியத்துடன் ஆனந்தம் வர, இன்னொரு
ஆச்சரியம் தரும் திருமணம் செய்தியானது!
தள்ளாடும் 112 வயது வயோதிகன், 17 வயது
இல்லாளைத் தேர்வு செய்து, மணந்தானாம்!
மனைவியர் ஐந்து, வாரிசுகளாகப் பதினெட்டு,
மாபெரும் கூட்டமாகப் பேரன்கள், பேத்திகள்
தொண்ணூற்றியாறு என, ஒரு ஊர் போலவே
எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பெற்றும்,
இன்னும் பிள்ளை வரம் கேட்கும் முதியவன்,
என்ன பெயர் பெறுவான்? மதன காமராஜன்?
:hat: . . . 