அரக்கு மாளிகை?
மகாபாரதக் கதையில் வரும் துரியோதனன்,
மிகக் கொடிய எண்ணத்துடன், பாண்டவர்கள்
அழிந்து போய்விட, எளிதில் பற்றிக்கொண்டு
எரிந்து போகும் அரக்கு மாளிகை கட்டினான்!
இக்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வந்து,
அக்காலத்து அரக்கு மாளிகைபோல, உயர்ந்த
கட்டிடங்களை மாற்றுவது மிகக் கொடுமை!
சட்டெனத் தீ அணைக்க இயலாதது மடமை!
அழகான அடுக்கு மாளிகைகள் கட்டினாலும்,
எளிதாகத் தீ அணைக்கும் உபகரணங்களை
எப்போதுமே தயார் நிலையில் வைக்குமாறு
தப்பாது செய்வது மிகவும் தேவை அல்லவா?
நேற்றைய தீ விபத்து மனத்தைக் கலக்கியது!
ஏற்ற பாதுகாப்பும் இராதது வருந்த வைத்தது!
லஞ்சம் கொடுப்பதிலும் குறைவு கிடையாது;
வஞ்சம் செய்வோரைத் தடுக்கவும் முடியாது!
:evil: . . .
out: