கோடிகள் சேர்க்கப் புதிய வழி!
விலைவாசி உயர்வில் உலகமே இன்று
நிலை குலைந்திட, வாழ்க்கைத் துணை
தேடிக்கொள்ள, இந்தச் சமுதாயம் நன்கு
ஓடி அலைகின்றது! மாதம் ஒன்றிலேயே
லகரம் சம்பாதிக்கும் வரன்களைத் தேடிட,
லகரம் வரை செலவு செய்ய விழைகிறது!
கணினி மயமாகிவிட்ட இந்தக் காலத்தில்,
கணிசமான பொருள் சேர்க்க என்ன வழி?
இரு மனங்களை இணைக்கும் பாலமாகத்
திருமணம் மையங்கள் அமைப்பதே அது!
திருமண மையங்களைத் தேடி, பெற்றோர்
திருமண வயதுப் பிள்ளையின் விவரங்கள்
பதிவு செய்து, வரன் வேட்டை ஆரம்பித்து,
பதிவு செய்த பிறரின் விவரங்களை அலசி,
நூறு சதம் திருப்தி வரும் வரை, தேடலை
வேறு வழியின்றிச் செய்வார், தொடர்ந்து!
இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை
இருக்கின்றன, வித விதமான பதிவுகள்!
கோடிகளில் தொடர்ந்து பணம் கொட்டிட,
நாடிவிட்டனர் பலர், இந்தப் புது வழியை!
opcorn: