திருமதி ஜெ. ஜெ தூண்டிய ஒரு பொறி; உதித்தவை இரு புதுக் குறள்கள்.
அதிகாரம் ஒன்றில் பத்து குறள்கள் வேண்டுமே! இதோ - புது அதிகாரம்.
கார்ட்டுடைமை.
பெற்றிடுவர் பண்டங்களை மலிவாக ரேஷன்கார்ட்
பெற்றுள்ள ஏழை எனின். (1)
காசின்றி எதனையும் வாங்குவர் க்ரெடிட்
கார்டினை வைத்துள் ளவர். (2)
பட்டாசில் ஐம்பதாயிரம் இன்வெஸ்ட் செய்வர்
பான்கார்ட் காட்டு பவர். (3)
தனக்குவமை இல்லா ஆதார்கார்ட் இல்லாரின்
மனக்கவலை மாற்றல் அரிது. (4)
எண்ணியது எண்ணியாங்கு எய்துப தன்னுடன்
ஆதார்கார்ட் இருக்கப் பெறின். (5)
தற்காத்துத் தன்கார்ட் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (6)
செல்லுலாப் பேசியும் செல்லாது ஆதாருடன்
சேர்க்காது போகப் பெறின். (7)
ஆண்டவனைக் காணார் இறந்தால் எரியார்
ஆதார்கார்ட் இல்லா தவர். (8)
வேண்டும் ஆதார்கார்ட் கையில் இருப்போர்க்கு
யாண்டும் இடும்பை இல. (9)
கார்டுகள் வாழ்விற்கு இன்பம் அதற்கின்பம்
ஆதார்கார்ட் கிடைக்கப் பெறின். (10)
eace: