திருமலை ரகசியம்!
'ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்த,
ஏதும் தர வேண்டாம் தலை மழிப்பவருக்கு' - என
அறிவிப்பு உள்ளது; பணம் வாங்கியதால் - வேலை
பறிக்கப்பட்டதாம், 243 முடி திருத்துபவர்களுக்கு!
பத்து, இருபது என, தலை ஒன்றுக்கு வாங்கியதாய்,
பத்திரிகைக்கு அவர்கள் சொல்லுவது மிகத் தவறு!
எங்கள் வீட்டுக் குழந்தைக்காக, நூறு ரூபாய் தந்திட,
எங்களிடம் கேட்டார், 'பிய்யம், பப்பு, நூனி லேதா?'
தெலுங்கு அறிந்த நான் புரிந்துகொண்டேன், அவர்
எதிர்பார்ப்பதை! அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய்!!
பின் என்ன? இன்னும் ஒரு நூறு ரூபாயைத் தந்து,
இன்னும் பேசாமல் அவர் வாயை அடக்கினோம்!
opcorn: .... :tape2: