நம் உயிர் காப்பான்!
வெளியே செல்லுமுன் உம் இரு கரங்களின்
வெளியே பூசிடுவீர் கொஞ்சம் பசுஞ்சாணி!
எத்தனை சிறந்த எளிய வழி இது என
அத்தனை விஷயமும் உரைக்கிறேன் இப்போது!
நம்மிடம் யாரும் நெருங்கியும் வந்திடார்;
நம்முடன் கைகளைக் குலுக்கவும் முயன்றிடார்!
எந்தப் பொருளையும் நம்மைத் தொடவிடார்;
எந்தப் பொருளையும் நம்மிடம் கொடுத்திடார்!
நம் முகத்தில் கண், மூக்கு, வாயை
நம் கைகளால் தொடவே கூசுவோம்!
வீடு திரும்பியதும் சோப்பு இட்டு, கைகளைக் கழுவி
-விட்டு உணவைப் பற்றிக் கவலை கொள்வோம்!
மருத்துவர் பரிந்துரை செய்யும் எல்லாமே
கருத்தில் கொள்ளுமே இந்தப் பசுஞ்சாணி!
உலகம் முழுதும் பரப்புவோம் கொரோனாக்
கவசம் தந்திடும் "சாணி-டைசர்" மகிமையை!
"சாணி-டைசர்" புகழ் ஓங்குக!!


