காமம் கொடியது!
இதிஹாஸங்கள் இரண்டும் காணும்போது,
மதியில் வரும் சில நிஜமான புரிதல்கள்!
அறு வகைத் தீமைகளில் முதன்மையாக
வரும் காமம்; அதன் பின் பிற தொடரும்.
காமத்தால் வரும் கேடுகள் எல்லாம், நம்
க்ஷேமத்திற்காகப் பெரியோர் உரைத்தார்!
முதுமையில் அடி வைக்கும் காலம், காமக்
கொடுமையால், உயிர் துறந்தனர் இருவர்.
மனைவிக்கு மதி மயங்கித் தந்த வரங்களால்,
மகனைப் பிரிந்து, வருந்தி, இறந்தார் ஒருவர்.
வாசம் மிக்க பெண்ணை மோகித்து, மணந்து,
நேசம் மிக்க முதல் மகனை 'பீஷ்மன்' ஆக்கி,
தன் தவறை உணர்ந்து, மனமுடந்து, அதனால்
தன் உயிரைத் துறந்தார் மற்றொருவர். ஆனால்
காம வயப்படாது, அரசர்கள் வாழ்ந்திருந்தால்,
நாம் படிக்க இதிஹாசங்கள் கிடைத்திராதோ?
நட்புடன்,
ராஜி ராம்